’ஜனநாயகன்’ வழக்கு தள்ளுபடி: படம் எப்போது ரிலீஸ்?
விஜயின் ’ஜனநாயகன்’
Jana Nayagan Release Date Update in Tamil : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார்.
இதையடுத்து சினிமாவில் ஜனநாயகன் தான், தனது கடைசி படம் என்றும் அறிவித்திருந்தார்.
இதனால் ஜனநாயகன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
ஜனநாயகன் சிக்கல்
பொங்கலை முன்னிட்டு வெளியாக வேண்டிய ஜனநாயகன் தணிக்கை சான்று கிடைக்காத காரணத்தால் பல இன்னல்களை சந்தித்து வருகிறது.
பல பிரபலங்களும் கூட விஜய்க்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்திருந்தனர்.
தணிக்கை குழு
ஜனநாயகன் படத்தில் மத நல்லிணத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும் தணிக்கை குழுவினரால் புகார் முன்வைக்கபட்டது.
இதனால் படத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று மறு ஆய்வு குழுவிற்கு அனுப்பப்பட்டது.
தயாரிப்பு நிறுவனம் வழக்கு
தணிக்கை குழுவினரின் புகாருக்கு எதிராக படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தணிக்கை குழு வாரியம் எதிர்ப்பு
தணிக்கை சான்று வாரியத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வானது, தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், ஜனநாயகன் படத்தை மறு ஆய்வு குழுவிற்கு அனுப்பியதை எதிர்த்து, திருத்த மனு தாக்கல் செய்யவும் தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
தணிக்கைகுழுவை அனுகிய ஜனநாயகன்
இதையடுத்து தனி நீதிபதி முன் உள்ள வழக்கை திரும்பப் பெறுவதாக தயாரிப்பு நிறுவனம் உயர்நீதி மன்ற பதிவுத் துறைக்கு கடிதம் அனுப்பியது.
இதற்கு முன்பாக தணிக்கைச் சான்று மறு ஆய்வு குழுவையும் ஜனநாயகன் படக்குழு அணுகியுள்ளது.
வழக்கு தள்ளுபடி
இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் வழக்காக ஜனநாயகன் - தணிக்கை குழு விவகாரம் வழக்கு விசாரிக்கபட்டது.
வழக்கை வாபஸ் பெறுவதற்கான தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கை தனி நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஜனநாயகன் ரிலீஸ் எப்போது?
கடந்த வாரம் தான் திரைப்படங்களுக்கு இனி 18 நாட்களுக்குள் சென்சார் சர்டிஃபிகேட் வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல். முருகன் கூறியிருந்தார். இப்போது ஜனநாயகன் படக்குழு மறு ஆய்வுக் குழுவிற்கு படத்தை அனுப்பியுள்ளனர்.
புதிதாக அமைக்கப்பட்ட குழுவினர் அந்த படத்தை மீண்டும் முழுமையாக பார்ப்பார்கள் . அதனால் அடுத்த 20 நாட்களுக்குள் நிச்சயமாக தணிக்கை சான்றிதழ் கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அப்படி 20 நாட்களுக்குள் கிடைத்துவிட்டால், இந்த மாதத்தின் இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் தொடக்கத்திலோ படம் ரிலீஸ் ஆகவும் வாய்ப்புள்ளது.

