ஜனநாயகன் விஜய் போஸ்டர் ரிலீஸ்- குஷியில் தொண்டர்கள், ரசிகர்கள்!

Jana Nayagan New Poster Release Date Update in Tamil : எதிர்பாரத நேரத்தில் வெளியான தவெக தலைவர் விஜயின் ஜனநாயகன் பட போஸ்டரை ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
Actor Cum Politician Vijay Movie Jana Nayagan New Poster Release Date Update in Tamil
Actor Cum Politician Vijay Movie Jana Nayagan New Poster Release Date Update in TamilKVN Productions
2 min read

சினிமாவில் இருந்து அரசியலில் விஜய்

Jana Nayagan New Poster Release Date Update in Tamil : கோலிவுட் திரையுலகில், முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தமிழகத்தின் சினிமா நட்சத்திரங்களில் உயர்ந்த சம்பளம் வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில், சமீபத்திய தகவலின் படி, விஜய் தன்னுடைய படங்களுக்கு ரூ.200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருவதாக, அவரே மேடையில் கூறியிருந்தார். அதே போல் தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக திகழ்ந்து கொண்டிருக்கும் தளபதி, அதிரடியாக அரசியலில் இறங்கி, தற்போது கட்சி நிறுவி ஒரு அரசியல் வாதியாக பெரும் செல்வாக்கு தலைமையாக மாறி வருகிறார்.

விஜயின் அரசியல் பயணம்

விஜயின் இந்த முடிவு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தாலும், விஜய்யை அரசியலுக்கு வரவேற்று அவருக்கு தொடர்ந்து தங்களின் ஆதரவை கொடுத்து வருகிறார்கள் மக்கள். சமீபத்தில் இவர் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டங்கள் அனைத்திலும், கூட்டம் அலைகடல் போல் திரண்டு தங்களின் ஆதரவை கொடுத்து மட்டுமல்லாமல், கரூர் கூட்டம் அன்று பெரும் உயிரிழப்பு வரை என இந்திய அளவில் பெரிய சர்ச்சைக்குரிய விசயமாக தலையெடுத்தது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு

இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர் குடும்ப உறுப்பினர்களை, சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து உயிரிழந்தவர்களை தனி வாகனம் வைத்து அழைத்து சந்தித்தார். அதில், அவர் தங்களிடம் 8 மணி நேரத்திற்கு மேல் உடனிருந்து மன்னிப்பு கேட்டதாக விஜயை சந்தித்த மக்கள் கூறினார். இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், இந்த சம்பவத்திற்கு பிறகு விஜய் முகம் காட்டி, நேரடியாக பேசினார்.

ஜனநாயகன் படம் ரிலீல்

இது ஒரு புறம் இருக்க, தளபதி விஜய் தற்போது தன்னுடைய கடைசி படமான 'ஜனநாயகன்' ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்க, பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் அப்டேட் அல்லது போஸ்டர் குறித்த தகவல் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதை அடுத்து இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் இருந்து ரசிகர்கள் வரை பேசப்பட்டது.

ஜனநாயகன் புதிய போஸ்டர் வெளியானது:

ஆனால் எதிர்பாரத நேரத்தில் , தளபதி விஜயின் புதிய போஸ்டர் ஒன்றை 'ஜனநாயகன்' படக்குழு(Jananayagan New Poster) வெளியிட்டுள்ளது. இதில் தளபதி விஜய் தனி ஒருவனாக நெஞ்சை நிமிர்த்தி, ஆயிரக்கணக்கானோர் மத்தியில் கருப்பு கூலிங் கிளாஸ் அணிந்து, நீல நிற சட்டையில் முறுக்கு மீசையோடு உள்ளார். கழுத்தில் கருப்பு நிற கயிறு ஒன்றும் அணிந்துள்ளார். மேலும் விஜய் நெஞ்சின் மீது மக்கள் கைவைத்துள்ளனர். இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களால் சோசியல் மீடியாவில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

ஜனநாயகன் படம் பற்றிய விவரம்:

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் இந்த திரைப்படத்தில், தளபதி விஜய் அரசியல் கலந்த கதைக்களத்தில் நடிக்கிறார். மேலும் போலீஸ் அதிகாரியாக இவர் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இவரை தவிர மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், ப்ரியாமணி, நரேன், மோனிஷா பிளஸி, டி ஜே அருணாச்சலம், ரேவதி, நிழல்கள் ரவி, போன்ற பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சுமார் 300 கோடி(Jana Nayagan Budget) பட்ஜெட்டில் கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம்(KVN Productions) தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்க சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்துள்ள நிலையில் போஸ்டர் வெளியீட்டால் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சம் தொட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in