ஜனநாயகனுக்கு ’ரூ.250 கோடி’ சம்பளம்! : சினிமாவில் விஜய் உச்சம்

இந்திய திரையுலகில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில், புதிய உச்சத்தை விஜய் தொட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஜனநாயகனுக்கு ’ரூ.250 கோடி’ சம்பளம்! : சினிமாவில் விஜய் உச்சம்
https://x.com/actorvijay?lang=en
1 min read

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக உருவாகி வரும் படம் ஜனநாயகன். கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே பாக்கி இருக்கிறது. இதன் உரிமைகளைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.

இதனிடையே, ‘ஜனநாயகன்’ படத்துக்கு விஜய்க்கு 250 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன், ஜி.எஸ்.டி தொகையும் இணையும். அப்படி பார்த்தால், இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பது விஜய்தான்.

ஏனென்றால், முன்னணி நடிகர்கள் பலர் சம்பளமாக ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு, படத்தின் வியாபாரத்தில் இருந்து பங்கு என்றும் ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். ஆனால், சம்பளமாக இவ்வளவு பெரிய தொகை பெற்றுள்ள முதல் நடிகர் விஜய்தான்.

இது அவருடைய அசுர வளர்ச்சியைக் காட்டுவதாக இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். இவ்வளவு பெரிய சம்பளம் வாங்கும் சமயத்தில்தான் ‘சினிமா வேண்டாம்’ என்று அரசியலுக்கு வந்துள்ளார் என்றும் ரசிகர்கள் உணர்ச்சி பொங்க பேசி வருகின்றர்.

இருந்தாலும், 2026ம் ஆண்டு தேர்தல் முடிவுகள், தவெகவுக்கு கிடைக்கும் வெற்றிகளை, மீண்டும் சினிமாவுக்கு திரும்புவது குறித்து விஜய் முடிவெடுப்பார் என்கின்றனர் திரையுலக வட்டாரத்தினர்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in