தனுஷின் D55 அப்டேட் உறுதி : புகைப்படம் வெளியிட்ட படக்குழு!

Dhanush D55 Cast & Crew updates in Tamil : இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் அடுத்த படமான D 55 குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
Actor Dhanush D55 Cast & Crew Updates Director Rajkumar Periasamy Pooja Hegde Music Director Sai Abhyankkar D55 Movie Update in Tamil
Actor Dhanush D55 Cast & Crew Updates Director Rajkumar Periasamy Pooja Hegde Music Director Sai Abhyankkar D55 Movie Update in TamilSource : D55
1 min read

தனுஷின் சினிமா பயணம்

Dhanush D55 Cast & Crew updates in Tamil : தமிழ் சினிமாவில் தற்போது நட்சத்திர நடிகர் பட்டியலில் நீங்காத இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் தனுஷ். இயக்குநர் மற்றும் அவரது சகோதரருமான செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் முதன்முதலாக காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் 2003 ஆம் ஆண்டு திரையுலகிற்கு வந்தார்.

திறமையால் உயர்ந்த தனுஷ்

பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்ட இவர், தனது நடிப்பு திறமையாலும் உயர்ந்து தொடர்ந்து தனக்கென இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்கவைத்து கொண்டார்.

பின்னர், அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகி அவரை கொண்டாட ஆயத்தமாகினர்.

தனுஷ் படத்தின் அப்டேட்

இதனைத்தொடர்ந்து, நடிகர் தனுஷ் நடிப்பை தாண்டி, இயக்கத்திலும் மும்முரம் காட்டி பவர் பாண்டி படத்தின் மூலம், தனது இயக்கத்திற்கான திறமையை மக்களிடம் வெளிகாட்டி தன்னை முன்னிலை படுத்தினார்.

பின்னர், ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என தொடர்ந்து இறுதியாக அவரே நடித்து இட்லி கடை என்ற படத்தை இயக்கினார்.

இப்படி, அவரது ரசிகர்களை தாண்டி , திரை ரசிகர்களை குஷியாக்கி கொண்டிருக்கும் நடிகர் தனுஷின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தனுஷின் அடுத்த அப்டேட்

அதன்படி, தற்போது நடிகர் தனுஷ், ’கர’ என்னும் புதிய படத்தில் நடித்து வருகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தை போர்த்தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்குகிறார். இதற்கிடையில் அடுத்த படமான ’D 55’ குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதன் படி தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகி தனுஷ் ரசிகர்களை கூடுதலாக குஷிப்படுத்தியுள்ளது.

D 55 படத்தில் இணைந்த சாய்பல்லவி

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். மேலும் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்நிலையில், ‘D 55’ படத்தின் சாய் பல்லவி நடிக்கிறார்.

இந்த அறிவிப்பை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ், சாய் அபியங்கர் ஆகியோர் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in