

Dhanush D55 Movie Update 2026 in Tamil : தனுஷின் 55 வது திரைப்படத்தில் நடிகர் மம்முட்டி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ்
நடிகர் தனுஷ் நடிக்கும் 55-வது திரைபடத்தை பிரபல இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார்.
இவர் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்று பெற்ற ‘ அமரன் ‘ திரைப்படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ், சாய் பல்லவி, ஸ்ரீலீலா
தனுஷின் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
பிப்ரவரியில் D -55 பூஜை
இத்திரைப்படத்தின் பூஜையானது, கடந்த மாதம் ஐந்தாம் தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்தது.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு
முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பிரபல நடிகர் மம்முட்டி இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அவர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
D - 55 பிளாக் பஸ்டர் ஹிட் -ரசிகர்கள் ஆர்வம்
நடிகர் தனுஷ் நடித்த திரைப்படங்களில் இந்த திரைப்படம் தான் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தனுஷின் D - 55 பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் என்ற எதிர்பார்ப்பும் தனுஷ் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.