பெரும் வரவேற்பை பெற்ற பைசன் காளமாடன்
Actor Dhruv Vikram New Movie Update in Tamil : சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மனதை கவர்ந்த திரைபடம் தான் பைசன்காளமாடன் ,அப்படம் மூலம் தன் நடிப்பை சிறப்பாக பறைசாற்றினார்நடிப்பை நிலைநிறுத்தினர் துருவ் விக்ரம்.
புதிய படத்தில் ஒப்பந்தம்
பைசன் திரைப்படத்திற்கு பின்பு எந்த படத்திற்கும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த துருவ் விக்ரம் தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
திரைப்படம் குறித்த தகவல்
காதல் படமாக உருவாகும் என திரைப்பட குழு தெரிவித்துள்ளது . தீபக் ரெட்டி இயக்கும் இப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகிறது.
இதில் நாயகிகளாக ருக்மணி வசந்த் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
இதன் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரியவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது .
கதை பிடித்துப்போன காரணத்தினாலே ஒப்பந்தம்
பைசன் திற்படத்திற்கு பிறகு இப்படத்தின் திரைக்கதை பிடித்து போன காரணத்தினாலே ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் .மேலும்
இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘கில்’ திரைப்படத்தில் தென்னிந்திய ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிப்பதாக இருந்தது. ஆனால், அதில் இருந்து விலகிவிட்டார்.