கோவா சர்வதேச திரைப்பட விழா கொண்டாட்டம்- ரஜினிகாந்த்துக்கு கௌரவம்!

Rajinikanth in Goa International Film Festival 2025 : கோவாவில் நடைபெற உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், பல்வேறு கொண்டாடங்களுடன் மறைந்த இயக்குநர்கள் மற்றும் சிறந்த நடிகர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர்.
Actor Rajini Kanth Will Be Honour in Goa International Film Festival 2025 Check Goa Film Festival Dates in Tamil
Actor Rajini Kanth Will Be Honour in Goa International Film Festival 2025 Check Goa Film Festival Dates in TamilGoogle
1 min read

இந்திய சர்வதேச திரைப்பட விழா

Rajinikanth in Goa International Film Festival 2025 Dates in Tamil : கோவாவில் 56ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில், 81 நாடுகளைச் சேர்ந்த சுமார் 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த நிலையில், விழாவில் நடைபெறும் சர்வதேச போட்டியின் கீழ் தங்க மயில் விருதுக்கு, கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அமரன் திரைப்படம்

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான அமரன் திரைப்படம் முழுவதும் ஒரு இராணுவ வீரரின் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்ட படமாகும். இந்த கதை உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது என அப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்தார். மேலும், படம் மக்களின் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, உண்மையில் உயிரிழந்த ராணுவு வீரர் முகுந்த் மனைவி, மற்றும் குடும்பத்தினருக்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார். இதனால், இப்படம் உண்மை நிகழ்வுகளுடன் தழுவி தமிழ் சினிமா மத்தியில் பெரும் புகழ் பெற்றது. எனவே, சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படுவதற்கு இராணுவ வீரரின் கதையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியத் திரைப்பட விழாக்களில் முதன்மையான இவ்விழாவில் நாட்டின் முக்கிய திரைக்கலைஞர்கள் கௌரவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், குறிப்பாக தமிழகத்தின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கவுரவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவம்

தமிழகத்தில் மட்டுமல்லாது உலகளவில் தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது அனைவரும் அறிந்தது. தற்போது 170 படங்களை தாண்டி நடித்து கொண்டிருக்கும் இவருக்கு மூத்தோர்கள் முதல் இளம் தலைமுறை வரை ரசிகர் பட்டாளம் ஏராளம். தமிழகத்தில் நட்சத்திரங்களில் முதன்மை நட்சத்திரமாகவும், நீண்ட நாள் திரைப்பயணத்தின் காரணமாகவும், சர்வதேச விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கௌரவிக்கப்பட(Rajinikanth in Goa Film Festival) உள்ளதாக தெரியவருகிறது.

நூற்றாண்டுகள் கொண்டாட்டங்கள்

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், நடிகர் ரஜினிக்கு இந்த கௌரவம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்திய திரைப்பட விழாவில், மறைந்த திரைப்பட இயக்குநர்கள் குரு தத், ராஜ் கோஸ்லா, பானுமதி, ரித்விக் காதக், பூபென் ஹசாரிகா மற்றும் சலீல் சௌதரி ஆகியோரின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in