
எதிர்பார்ப்புடன் ரஜினியின் ‘கூலி’ :
Coolie Ticket Pre Booking Collection Update : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 14-ம் தேதி இந்த திரைப்படம்(Coolie Release Date) வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 8ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் அதைத் தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு படம் வெளியாகிறது. எனவே, வசூலில் குறை இருக்காது என்று தியேட்டர் உரிமையாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
முன்பதிவு டிக்கெட் விற்பனை :
‘கூலி’ படத்தின் டிக்கெட் முன்பதிவு(Coolie Ticket Booking Collection) விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட்டுகளை அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. விடுமுறை நாட்கள் தொடர்ந்து வர இருப்பதால் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகளும் காலியாகியுள்ளன.
ஆகஸ்டு 14 ம் தேதியான(Coolie Ticket Booking Date) முதல் நாளில் மட்டும் 50 கோடிக்கும் அதிமான வசூல் டிக்கெட் முன்பதிவில் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
அமெரிக்காவில் அமோக விற்பனை :
அமெரிக்காவில் ‘கூலி’ படத்தின் டிக்கெட்டுகள் 1.7 மில்லியன் டாலருக்கு(Coolie Ticket Booking Collection in America) விற்பனையாகியுள்ளன. அந்நாட்டில் தமிழ் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய ஓப்பனிங்காக இது பார்க்கப்படுகிறது. விஜயின் ‘லியோ’ படத்தின் டிக்கெட் 1.3 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனையாகின. இந்த சாதனையை கூலி முறியடித்து உள்ளது.
இந்தியாவில் முன்பதிவு தீர்ந்தது :
அதேபோல, ‘கூலி’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 2 நாட்களில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன(Coolie Ticket Booking India). கடைசியாக ‘லியோ’ படத்தின் முதல் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதன் மூலம் ‘லியோ’ படத்தை விட கூடுதல் நாட்களுக்கான முன்பதிவை குறைந்த நேரத்திலேயே ‘கூலி’ முறியடித்துள்ளது.
’லியோ’வை விஞ்சுமா ’கூலி’ :
இதேபோன்று, ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூல் சாதனை 140 கோடியாக உள்ளது. இதை ‘கூலி’ முறியடிக்குமா(Coolie First Day Collection) என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கூலி திரைப்படம் ‘A' சென்சார் சான்றிதழ் பெற்றிருப்பது வசூலை பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க : விஜய்யை ஓவர்டேக் செய்யும் ரஜினி : ’கூலி’ விற்பனையில் சாதனை
முன்பதிவு வசூல் ரூ.50+ கோடி :
ஹிருத்திக் ரோஷன் - ஜூனியர் என்டிஆரின் ‘வார் 2’ திரைப்படம் ‘கூலி’ வெளியாகும் அதே நாளில் வெளியாக இருப்பதால் வட மாநிலங்களில் பாக்ஸ்ஆஃபீஸ் வசூல் பாதிக்கப்படலாம். தற்போது வரை ‘கூலி’ திரைப்படம் அட்வான்ஸ் புக்கிங்கில்(Coolie Ticket Booking Collection Worldwide) உலக அளவில் ரூ.50+ கோடியை நெருங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
=======