"வரலாறு படைக்கப்பட்டுள்ளது" : மகளிர் அணிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

Actor Rajinikanth Wishes Indian Women's Cricket Team for Wins ICC World Cup 2025 : மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Actor Rajinikanth congratulates the Indian team for winning the Women's World Cup.
Actor Rajinikanth congratulates the Indian team for winning the Women's World Cup.
1 min read

உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர்

Actor Rajinikanth Wishes Indian Women's Cricket Team for Wins ICC World Cup 2025 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 52 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்திய அணி சாம்பியன்

உலக கோப்பை மகளிர் தொடரின் இறுதி ஆட்டத்திற்கு இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றன. இதையடுத்து, நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 298 ரன்கள் குவிக்க, 299 என்ற இமாலய இலக்கை தென் ஆப்பிரிக்க விரட்டியது. இந்திய அணியின்(IND W vs SA W Match Highlights in Tamil) அற்புதமான பந்து வீச்சால், 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோல்வியை தழுவியது. இதையடுத்து முதன்முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி இந்திய அணி அசத்தியது.

ரஜினிகாந்த் வாழ்த்து :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரைப்பட பணிகளில் பிசியாக இருந்தாலும், சிறந்த படங்கள் மற்றும் நாட்டுக்கு பெருமை தேடி கொடுப்பவர்களை வாழ்த்த தவறுவது கிடையாது. அந்த வகையில் இந்திய மகளிர் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து(Rajini wishes To Women Cricket Team) இருக்கிறார்.

இந்தியாவுக்கு அற்புதமான தருணம்

இதுகுறித்து ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில், “இந்தியாவுக்கு என்ன ஒரு அற்புதமான தருணம். நம் மகளிர் அணி வருங்கால தலைமுறைக்கு தங்களது தைரியத்தை காட்டியுள்ளனர். அசைக்க முடியாத சக்தியுடனும், அச்சமற்ற மனப்பான்மையுடனும் இந்தியாவின் மூவர்ணத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளனர்.

வரலாறு படைக்கப்பட்டுள்ளது

அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். தற்போது ஒரு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்” என ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார். கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மகளிர் அணிக்கு குவியும் பரிசு

பிசிசிஐ சார்பில் 51 கோடி ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐசிசி சார்பில் 39.78 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in