

Actress Trisha in a new thriller web series?
இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் புதிய சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் இணையத் தொடரில் நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய இணையத் தொடரில் த்ரிஷா
சமீபத்தில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான 'மா இண்டி பங்காரம்' தமிழில் ’எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் புதிய இணையத் தொடரில் நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் கதைக்களம்
இந்த இணையத் தொடர் ஒரு சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் கதையைக் கொண்டது என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த இணையத் தொடரில் நடிக்க த்ரிஷா ஒப்புக் கொண்டிருப்பதாகவும், வரும் நவம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே 2018-ல் ஆர். மாதேஷ் இயக்கத்தில் வெளியான 'மோகினி' திரைப்படத்தில் நடிகை த்ரிஷா நடித்திருந்தார்.
சமீபத்திய மற்றும் வரவிருக்கும் திரைப்படங்கள்
கடந்த 2025-ல் 'தக் லைஃப்', 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி', 'ஐடென்டிட்டி' ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. தொடர்ந்து சூர்யாவுடன் நடித்த 'கருப்பு' திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.
மேலும் 'கர்ஜனை', 'சதுரங்க வேட்டை - 2' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
எதிர்பார்க்கப்படும் பிற படங்கள்
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லாலுடன் நடித்த 'ராம்' திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து தெலுங்கு படமான 'விஸ்வம்பரா' படமும் வெளியாகக் காத்திருக்கிறது.
ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
கடந்த மூன்று மாதங்களாகப் புதிய படங்களில் ஒப்பந்தமாகாததால் நடிகை த்ரிஷா சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கப் போவதாக வதந்திகள் பரவிய நிலையில், இந்த தொடர் செய்தி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இதையும் படிங்க: மோசமான விமர்சனங்களால் அசத்தல் வெற்றி : சீனாவில் 'தி ஒடிசி', 'ஸ்பைடர் மேன்' வசூலை முறியடித்த 'நியு லை'!
======