மோசமான விமர்சனங்களால் அசத்தல் வெற்றி : சீனாவில் 'தி ஒடிசி', 'ஸ்பைடர் மேன்' வசூலை முறியடித்த 'நியு லை'!

அமெச்சூர்த்தனமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்ட திரைப்படம் ஒன்று, தற்போது சீனாவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையைப் படைத்து அசத்தியுள்ளது.
'Niu Lai' breaks the box-office records of 'The Odyssey' and 'Spider-Man' in China!
'Niu Lai' breaks the box-office records of 'The Odyssey' and 'Spider-Man' in China!source: google
1 min read

'Niu Lai' breaks the box-office records of 'The Odyssey' and 'Spider-Man' in China!

மிகவும் மோசமான படம் என விமர்சிக்கப்பட்ட 'நியு லை' அனிமேஷன் திரைப்படம் சீனாவில் ரூ.20 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

கன்றுக்குட்டி - பறவையின் கனவுப் பயணம்

ஒரு கன்றுக்குட்டிக்கும் வானம்பாடி பறவைக்கும் இடையில் உருவாகும் கனவுப் பயணத்தை மையமாகக் கொண்டு 84 நிமிடங்களில் உருவாக்கப்பட்ட சீன மொழிப் படம் 'நியு லை' (Niu Lai).

அனிமேஷன், திரை அனுபவம் என அனைத்து அம்சங்களிலும் மிகவும் அமெச்சூர்த்தனமாக அதாவது மோசமாகவும் இருப்பதாக விமர்சிக்கப்பட்ட இத்திரைப்படம், தற்போது சீனாவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையைப் படைத்து அசத்தியுள்ளது.

தொடக்கத்தில் ஏமாற்றம் தந்த வசூல்

எந்தவித அதிகாரப்பூர்வ ட்ரெய்லரோ அல்லது விளம்பரங்களோ இல்லாமல் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், முதல் பத்து நாட்களில் நாடு முழுவதும் 300-க்கும் குறைவானவர்களே பார்த்திருந்தனர்.

இதனால் அதன் முதல் பத்து நாள் வசூல் வெறும் 7,700 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.04 லட்சம்) மட்டுமே இருந்தது.

சமூக வலைத்தள மீம்களும் ட்விஸ்ட்டும்

படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, படத்தின் மோசமான கிராஃபிக்ஸ், இயல்புக்கு மாறான கதாபாத்திர வடிவமைப்பு, குரல் பதிவுகள் மற்றும் குழப்பமான கதைக்களத்தை நெட்டிசன்கள் கடுமையாகக் கேலி செய்தனர்.

அப்படி என்னதான் மோசமாக இருக்கிறது?

சிலர் இதனை மாணவர்களின் ப்ராஜெக்ட் உடன் ஒப்பிட்டும், 2026-ம் ஆண்டின் மிக மோசமான படம் என்றும் விமர்சித்தனர். இந்த எதிர்மறை விமர்சனங்களே படம் குறித்த ஆர்வத்தை மக்களிடையே தூண்டி, 'அப்படி என்னதான் மோசமாக இருக்கிறது' என்று பார்க்க மக்களைத் திரையரங்கிற்கு வரவழைத்தது.

பாக்ஸ் ஆபீஸில் ரூ.20 கோடி வசூல் சாதனை

எதிர்மறை விளம்பரங்களால் மக்கள் திரையரங்குகளுக்குப் படையெடுத்ததால், இத்திரைப்படம் தற்போது 14.9 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடி) வசூலித்துள்ளதாகச் சீனாவின் சினிமா டிக்கெட் விற்பனை தளம் தெரிவித்துள்ளது.

இந்த எதிர்பாராத மக்கள் ஆதரவால், சீன பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 'தி ஒடிசி' மற்றும் 'ஸ்பைடர் மேன்' ஆகிய முன்னணி திரைப்படங்களை 'நியு லை' படம் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

தாயும் மகனும் இணைந்து உருவாக்கிய படம்

ஐந்து ஆண்டுகள் உழைப்பில் ஒரு தாயும் மகனும் இணைந்து இந்தத் திரைப்படத்தை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. தயாரிப்பு, எழுத்து, இயக்கம், குரல் பதிவு என அனைத்துப் பணிகளையும் இந்த இருவர் குழுவே மேற்கொண்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) நொடிப் பொழுதில் துல்லியமான காட்சிகளை உருவாக்கும் தற்போதைய சூழலில், கைகளால் உருவாக்கப்பட்ட இதன் காட்சிகள் வித்தியாசமான அனுபவத்தைத் தருவதாக சிலர் இவர்களது முயற்சியைப் பாராட்டியும் வருகின்றனர்.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in