‘அனந்தன் காடு’: First Look, Teaser வெளியீடு

ஆர்யா மிரட்டும் ’அனந்தன் காடு’ திரைப்படம்
‘அனந்தன் காடு’: First Look, Teaser வெளியீடு
1 min read

நடிகர் ஆர்யா நடித்துள்ள ‘அனந்தன் காடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது.

2023-ம் ஆண்டு ஆர்யா நாயகனாக நடித்து வெளியான படம் ‘காதர் பாட்சா (எ) முத்துராமலிங்கம்’.

அதன்பிறகு, சில படங்களில் வில்லன், கவுரவ கதாபாத்திரம் என அவர் நடித்து வந்தார்.

தற்போது மீண்டும் நாயகனாக திரும்பி இருக்கிறார் ஆர்யா. அவர் நடித்துள்ள படத்திற்கு ‘அனந்தன் காடு’ என தலைப்பு வைத்து இருக்கிறார்கள்.

வினோத் குமார் தயாரித்துள்ள இப்படத்தினை ஜீயன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார்.

முரளி கோபி கதை எழுதியிருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‘ரன் பேபி ரன்’ படத்தினை இயக்கியவர் தான் ஜீயன் கிருஷ்ணகுமார்.

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகி இருக்கிறது.

ஆர்யா, இந்திரன்ஸ், முரளி கோபி, ரெஜினா, நிகிலா விமல் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக யுவா, இசையமைப்பாளராக அஜ்னீஷ் லோக்நாத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in