சன்னி தியோலின் ”பார்டர் 2” திரைப்படம் : மலைக்க வைக்கும் முன்பதிவு

Sunny Deol's Border 2 Advance Booking Collection Report : சன்னி தியோல் நடித்துள்ள பார்டர் 2 திரைப்படம், முன்பதிவில் பெரும் சாதனை படைத்து, அசத்தி வருகிறது.
Border 2 Advance Booking Collection Report Sunny Deol's film Border 2 is doing amazingly well, having achieved a huge success in bookings
Border 2 Advance Booking Collection Report Sunny Deol's film Border 2 is doing amazingly well, having achieved a huge success in bookingsSource : Border 2
1 min read

சன்னி தியோலின் பார்டர் 2

Sunny Deol's Border 2 Advance Booking Collection Report : 1997ல் வெளியான 'பார்டர்' படம் பாலிவுட்டில் சக்கை போடு போட்டது. அதன் இரண்தாம் பாகமாக பார்டர் 2 திரைப்படம் வெளியாகிறது. அனுராக் சிங் இயக்கியுள்ளார். சன்னி தியோல், வருண் தவான், தில்ஜித் தோசன்ஜ் நடிக்கின்றனர்.

ஜனவரி 23ல் ரிலீஸ்

குடியரசு தினத்திற்கு முன்பு ஜனவரி 23 ( நாளை மறுநாள் ) இந்தப் படம் வெளியாகிறது. இதற்கான முன்பதிவு நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமாக டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.

ரூ. 3.5 கோடிக்கு முன்பதிவு

முதல் நாள் முன்பதிவு வசூல் 3.5 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் துரந்தர் படத்தின் முன்பதிவை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்து இருக்கிறது பார்டர் 2.

வசூலில் பெரிய சாதனை

சன்னி தியோலின் 'ஜாட்' (₹2.4 கோடி) முன்பதிவையும் முறியடித்து இருக்கிறது. எனவே, முதல் நாளில் பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் மட்டும் 9,220 ஷோக்களில் படம் திரையிடப்படுகிறது.

போர் நாடகத் திரைப்படம்

இந்திய-பாகிஸ்தான் போரின் பின்னணியில் உருவான ஒரு போர் நாடகத் திரைப்படம். படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் 1971ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரை மையமாகக் கொண்டது.

டிரெய்லர் - ரசிகர்கள் கொண்டாட்டம்

படத்தின் டிரெய்லர் வெளியாகி, அதில் இடம்பெற்ற 'Ghar Kab Aaoge' பாடல் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தேசபக்தியையும் மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in