
நடிகர் விஜயகாந்த் :
Vijayakanth Movie Captain Prabhakaran Re Release 2025 : தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து இருந்தவர் விஜயகாந்த். சண்டை காட்சிகளில் தூள் பறத்தும் இவரது படங்கள் சக்கை போடு போடும். கிராம கதையம்சம் கொண்ட படங்களில் அசத்துவதிலும் விஜயகாந்திற்கு இணை அவர் மட்டுமே.
100வது படம் கேப்டன் பிரபாகரன் :
விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக(Vijayakanth 100th Film) வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையை செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ்(Captain Prabhakaran Release Date) புத்தாண்டில் வெளியான இந்த படம் விஜயகாந்த் ரசிகர்களை மட்டுமல்ல அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்தப் படம் மூலம் அவருக்கு ‘கேப்டன்’ என்ற அடைமொழி கிடைத்தது.
34வது ஆண்டில் கேப்டன் பிரபாகரன் :
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், காந்திமதி என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்டது.
டிஜிட்டலுக்கு மாற்றப்பட்ட கேப்டன் பிரபாகரன் :
தற்போது நவீன 4K தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, இன்று (ஆகஸ்ட் 22) வெளியாகியிருக்கிறது(Captain Prabhakaran Re Release Date) கேப்டன் பிரபாகரன். தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் இப்படம் வெளியாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஸ்பேரோ சினிமாஸ் (Sparrow Cinemas) சார்பாக இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது.
கண்ணீர் விட்ட பிரேமலதா :
விஜயகாந்தின் பிறந்த நாளை(Vijayakanth Birthday) முன்னிட்டு படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தனது மகன் விஜயபிரபாகரன், சகோதரர் L.K. சுதீஷ் ஆகியோருடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடலூரில் படத்தை பார்த்தார். அப்போது தன்னை அறியாமல் திரையில் விஜயகாந்தைப் பார்த்து பிரேமலதா மற்றும் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் அழுதனர். இந்த வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
=====