

சிவாஜி கணேசன் நினைவு தினம்
நடிகர் சிவாஜி கணேசனின் 25ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள சிவாஜி நினைவு மண்டபத்தில் அமைச்சர் ராஜ்மோகன், பிரபு உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அஞ்சலி செலுத்தியவர்களுக்கு நன்றி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு," நடிகர் திலகம் எனது தந்தை சிவாஜி கணேசனின் 25ஆம் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு நன்றி.
அமைச்சர் ராஜ்மோகன் என் வேண்டுகோளுக்காக இங்கு வந்திருக்கிறார் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
2028ல் சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா
2028ம் ஆண்டு சிவாஜி கணேசன் நூற்றாண்டு வருகிறது.முதலமைச்சர் விஜய் முன் நின்று நடத்துகிறேன் என தெரிவித்திருக்கிறார் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். இதற்காக தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரபு தெரிவித்தார்
காமராஜரின் பக்தர் சிவாஜி கணேசன்
அதனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில்,"நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எங்கள் கொள்கை தலைவர் காமராஜரின் பக்தர். முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்நாள் நண்பர். கலைத்துறையின் பிதாமகன் சிவாஜி கணேசன்.
கர்ணனை காட்டியவர் சிவாஜி
பாரதியார், வ.உ.சி, கர்ணன் போன்றோரை பார்த்ததில்லை சிவாஜி ஐயாவால் பார்த்திருக்கிறோம். கர்ணன் யார் என்று நாங்கள் நேரில் பார்த்தது இல்லை. அதனை கண்ணெதிரே காட்டியவர் சிவாஜி கணேசன். சிவாஜி
பிரமாண்டமாக நூற்றாண்டு விழா
சிவாஜி கணேசன் நூற்றாண்டு, பொன்னெழுத்தக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. வரலாறு சினிமா பெருமை கொள்வது போல் சரித்திரம் வியக்கும் வகையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் மிகப்பெரிய விழாவாக நடத்தப்படும்.
இது பெருமையல்ல. இது எங்கள் கடமை” என, அமைச்சர் ராஜ்மோகம் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
======================