

CM Vijay Jananayagan Movie Official Release Date July 23 Booking Starts July 19
தமிழக முதல்வர் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள, ரசிகர்கள் நீண்ட மாதங்களாக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி மற்றும் முன்பதிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது.
நீண்ட தணிக்கைச் சிக்கலும் நீதிமன்ற வழக்கும்
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம், முன்னதாக கடந்த ஜனவரி 9-ஆம் தேதியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என அறிவிக்கப்பட்ட இப் படத்தை, தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே சென்சார் சான்றிதழ் பெற்று வெளியிடப் படக்குழு தீவிரமாக முயன்றது.
தணிக்கை பெறுவதில் தொடர் சிக்கல்
ஆனால், தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க தாமதம் செய்ததால், தயாரிப்பு தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இதன் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் மேலும் தள்ளிப்போனது.
தேர்தல் வெற்றிக்குப் பின் கிடைத்த ‘ஏ’ சான்றிதழ்
இதற்கிடையே தேர்தல் முடிந்து, அதில் மாபெரும் வெற்றி பெற்று விஜய் தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகாவது சென்சார் சான்றிதழ் கிடைக்குமா என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த ஜூலை 9-ஆம் தேதி தணிக்கை வாரியம் இத்திரைப்படத்திற்கு ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கியது.
அத்துடன் இத்திரைப்படத்தின் நீளம் 183 நிமிடங்கள் (3 மணி நேரம் 3 நிமிடங்கள்) என்றும் தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது.
ஜூலை 23-ல் ரிலீஸ் – தயாரிப்பு நிறுவனம் மாஸ் அறிவிப்பு
இதைத் தொடர்ந்து, ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 23-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. இதற்கான முன்பதிவு வரும் ஜூலை 19-ஆம் தேதி முதல் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
"நெருப்பால் சோதிக்கப்பட்டது, காலத்தால் செதுக்கப்பட்டது, வரலாற்றிற்காக உருவாக்கப்பட்டது. போர் எவ்வளவு கடுமையாக இருக்கிறதோ, வெற்றியின் முழக்கம் அவ்வளவு சிறந்ததாக இருக்கும்!" என்று மிகவும் உத்வேகமாகத் தெரிவித்துள்ளது.
டைட்டில் கார்டில் மாறிய விஜய்யின் பெயர் – ரசிகர்கள் கொண்டாட்டம்
படம் அறிவிக்கப்பட்டு சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு இப்போது ரிலீஸாவதால், படத்தின் டைட்டில் கார்டில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தளபதி விஜய் to தமிழ்நாடு முதலமைச்சர்
வழக்கமாக வரும் ‘தளபதி விஜய்’ என்ற பெயருக்கு பதிலாக, ‘மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்’ என்று குறிப்பிடப்பட பட்டுள்ளாது. இதனால் முதல்வர் விஜய் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக எல்லையற்ற மகிழ்ச்சியிலும் பெரும் கொண்டாட்டத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
=====