முருகராக மாறும் தனுஷ்? : வெற்றிமாறனுடன் இணையும் புதிய பட அறிவிப்பு வெளியீடு!

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் 'தமிழ்முருகன்' புதிய படம் நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Dhanush Vetrimaaran New Movie Tamil Murugan Motion Poster Release 2026
Dhanush Vetrimaaran New Movie Tamil Murugan Motion Poster Release 2026google
1 min read

Dhanush Vetrimaaran New Movie Tamil Murugan Motion Poster Release 2026

தமிழ்த் திரையுலகில் மாபெரும் வெற்றிக் கூட்டணியாக வலம் வரும் தனுஷ் - வெற்றிமாறன் காம்போ, மீண்டும் ஒரு புதிய பிரம்மாண்ட படத்திற்காக இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வட சென்னை', மற்றும் 'அசுரன்' ஆகிய திரைப்படங்கள் வசூலிலும் விமர்சன ரீதியிலும் சாதனை படைத்தவை என்பதால், அடுத்ததாக 'வட சென்னை 2' வெளியாகும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், அதற்கு மாறாக யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் தனுஷ்: 'தமிழ்முருகன்'

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணையும் புதிய திரைப்படத்திற்கு 'தமிழ்முருகன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பிரபல எழுத்தாளர் அறிவுமதி இப்படத்தின் கதையை எழுதுகிறார் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தனுஷின் 'வொண்டர்பார் பிலிம்ஸ்' மற்றும் 'புரொடக்ஷன் மைல்ஸ் டு கோ' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றன.

முருகன் வேடத்தில் தனுஷ்

படக்குழு வெளியிட்டுள்ள 'தமிழ்முருகன்' படத்தின் மோஷன் போஸ்டரில், நடிகர் தனுஷ் 'முருகர்' வேடத்தில் தோன்றுவது போல வடிவமைக்கப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஜூனியர் என்டிஆர் பட சர்ச்சைக்கும், இதற்குமுள்ள கனெக்ஷன்?

சமீபத்தில் தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில், நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. அதுவும் முருகனைப் பற்றிய படம் எனக் கூறப்பட்ட நிலையில், அதன் அறிவிப்புப் பதிவில் "வடக்கில் பிறந்தவர்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வடக்கு முருகன் சர்ச்சைக்கு பதிலடி

இந்தச் சூழ்நிலையில், வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் 'தமிழ்முருகன்' என்ற தலைப்புடன் படம் அறிவிக்கப்பட்டிருப்பது, அந்தச் சர்ச்சைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

வெற்றிமாறன் மற்றும் தனுஷின் அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகள்

தற்போது நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 'அரசன்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் 2018-ல் வெளியான 'வட சென்னை' படத்தின் உலகிற்குள் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டு வருகிறது.

'தமிழ்முருகன்' படம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதன் கதைக்களம், பிற நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் போன்ற கூடுதல் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ்

தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'ஓம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மம்முட்டி, நசிருதீன் ஷா, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இத்திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in