

Director Arun Madheswaran on Actor Dhanush Ilayaraja Biography Movie Update in Tamil : நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் தனுஷ்.
இவர் இசைஞானி இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க போவதாக தகவல் வெளியான நாள்முதலே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
தனுஷ் - அருண்மாதேஷ்வரன் கூட்டணி
இதைத்தொடர்ந்து இந்த திரைப்படத்தை இயக்குநர் அருண்மாதேஷ்வரர் இயக்க உள்ளதாகவ தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது
ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஏனென்றால் தனுஷ்- அருண் மாதேஷ்வரன் கூட்டணியில் உருவான ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதே இதற்கு காரணம்.
இளையராஜா எனும் மேதை
1000 படங்களுக்கு மேல் இசையமைத்த புகழுக்கு உரியவர். எத்தனை புதிய இசையமைப்பாளர்கள் வந்தாலும் அவர்களுக்கும் குருவாக இருப்பவர்.
80 வயதைக் கடந்த பின்னரும் தொடர்ந்து அவரது இசைப்பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
கடந்து வந்த பாதை
சிறுவயது முதலே பல இன்னல்களை, வாழ்வியல் போராட்டங்களை சந்தித்தவர் இளையராஜா. அவர் இசைத்துறைக்கு எப்படி வந்தார், அவருடைய ஆரம்பகால வாழ்க்கைப் பயணம் எப்படி இருந்தது என இசைஞானியின் ரசிகர்களுக்கு அவரை அறிவதில் பெரும் ஆர்வம்.
அதனாலேயே அவருடைய பயோபிக் வரப்போகிறது என்றவுடன் எதிர்பார்ப்பும் அதிகரித்து இருந்தது.
பயோபிக் குழப்பம்
தனுஷ் நடிக்க அருண்மாதேஷ்வரன் இயக்குகிறார் என்ற தகவலை அடுத்து, அடிக்கடி கதை தொடர்பாக இயக்குநர் , இளையராஜாவை சந்தித்து பேசி வருவதாவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.
பயோபிக் தொடக்கவிழா
பின்னர், அதிகாரப்பூர்வமாக இந்த படத்திற்கான தொடக்க விழா கடந்த 2024 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இயக்குநர் மாற்றம்
இதைத்தொடர்ந்து திடீரென இயக்குநர் அருண்மாதேஷ்வரனுக்கு பதில் வேறு ஒரு இயக்குநர் பயோபிக்கை இயக்கவுள்ளார் என சொல்லப்பட்டது. பின்னர், இளையராஜாவின் பயோபிக் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இயக்குநர் தரப்பு அறிவிப்பு
இப்படி இளையராஜாவின் பயோபிக் தொடர்பாக ஏராளமான வதந்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், தற்போது இயக்குநர் அருண்மாதேஷ்வரன் தரப்பு , லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ திரைப்படத்திற்குப் பிறகு இளையராஜாவின் பயோபிக் படத்திற்கான பணிகள் தொடங்கும் என அறிவித்துள்ளது. இதனால் இளையராஜா மற்றும் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.