ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் தமிழ்த் திரைப்படம்: சாதனை படைக்கும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’!

Maharaja Hollywood Remake: விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ ஹாலிவுட்டில் ரீமேக்காகும் முதல் தமிழ் திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Maharaja Hollywood Remake
Maharaja Hollywood Remakesource:thamizhalai,ai generated
1 min read

First Tamil Film to Get a Hollywood Remake: Vijay Sethupathi’s Maharaja

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிப்பில் வெளியான 'மகாராஜா' திரைப்படம், ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் திரைப்படம் எனும் சாதனையைப் படைக்கவுள்ளது.

ரீமேக் உரிமையை கைப்பற்றிய ஹாலிவுட்டின் முன்னணி நிறுவனம்

இத்திரைப்படம் இந்திய அளவில் ரூ.199 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததோடு, சீன திரையரங்குகளில் வெளியாகி சுமார் ரூ.91.65 கோடியை வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. இதன் காரணமாக, ஹாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று அதிகாரப்பூர்வமாக ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளதாக தயாரிப்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தயாரிப்பாளர் உறுதிப்படுத்தல்

தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் 'தி ரூட்', 'திங்க் ஸ்டுடியோஸ்', 'பேஷன் ஸ்டுடியோஸ்' முதலானவை இத்தகவலைத் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் நடிக்கப்போகும் ஹாலிவுட் ஹீரோ யார்?

ஹாலிவுட் நடிகர் மேத்யூ மெக்கோனாஹே (Matthew McConaughey) இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக இணையத்தில் பரவி வரும் தகவல்கள் குறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பேசுகையில், "ஹாலிவுட் ஏஜென்சி ஏ-லிஸ்ட் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதில் மேத்யூ மெக்கோனாஹேவும் ஒருவராக இருக்கலாம், ஆனால் அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு எப்போது?

இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டில் மகாராஜா இந்தி இதன் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு தமிழ்ப்படம் சர்வதேச அளவில் ஹாலிவுட் ஸ்டுடியோவால் அங்கீகரிக்கப்பட்டு ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இதையும் படிங்க : 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை: சூர்யா - ஜோதிகாவின் கிறித்துவ முறைத் திருமணம் & சாதனையைப் படைத்த வீடியோ!

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in