கலை இயக்குநர் தோட்டாதரணிக்கு செவாலியர் விருது : பிரான்ஸ் கௌரவம்

Art Director Thotta Tharani Winners Of Chevalier Award 2025 : தமிழகத்தை சேர்ந்த பிரபல கலை இயக்குநர் தோட்டாதரணிக்கு செவாலியர் விருது வழங்கப்படும் என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
French government announced that famous art director Thotta Tharani from Tamil Nadu will be awarded Chevalier award 2025
French government announced that famous art director Thotta Tharani from Tamil Nadu will be awarded Chevalier award 2025Google
1 min read

பிரான்சின் செவாலியர் விருது

Art Director Thotta Tharani Winners Of Chevalier Award 2025 : செவாலியே (French: Chevalier) என்பது உலகின் பல பகுதிகளில் வசிக்கும் முன்னணி மற்றும் சிறப்புமிக்க மனிதர்களை பெருமைப்படுத்தும் வகையில் பிரான்ஸ் அரசு, 1957இல் இருந்து ஆண்டுதோறும் செவாலியர் என்ற உயரிய விருதினை வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது.

சிவாஜி கணேசன், கமல்ஹாசன்

அரசு கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக செவாலியர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை நடிகர் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்பட சிலர் பெற்றுள்ளனர்.

தோட்டாதரணி - செவாலியர் விருது

இந்நிலையில் செவாலியர் விருது பிரபல திரைப்பட கலை இயக்குநர் தோட்டாதரணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வரும் 13ம் தேதி ‘லா மேசான்’ (La Maison) என்ற ‘கஃபே–நூலக’த்தை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ திறந்து வைக்கிறார்.

13ம் தேதி விருது வழங்கும் விழா

அந்த நிகழ்வில் தோட்டாதரணிக்கு செவாலியர் விருது 13ம் தேதி வழங்கப்பட(Chevalier Award 2025 Date in Chennai) இருக்கிறது. கலைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக, இந்த விருது வழங்கப்படுகிறது.

கலை இயக்குநர் தோட்டாதரணி

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிப் படங்கள் மட்டுமின்றி பிரெஞ்சு, இத்தாலியப் படங்களுக்கும் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார் தோட்டாதரணி. ‘நாயகன்’ படத்துக்காகப் மும்பை தாராவி செட், ரஜினி நடித்த ‘சிவாஜி’, மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களுக்காக பிரம்மாண்ட செட்கள் அமைத்து அசத்தியவர் தோட்டாதரணி.

இரண்டு முறை தேசிய விருது

நாயகன் மற்றும் இந்தியன் படங்களில் அவர் செய்த பிரமாண்ட பணிகள் அவருக்கு இரண்டு முறை தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுத் தந்தன.

பத்மஸ்ரீ, கௌரவ டாக்டர் பட்டம் மற்றும் மாநில அரசுகளின் விருதுகள்தோட்டாதரணியால் பெருமை பெற்றன.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in