'நாட்டாமை குடும்பம்' என பச்சை குத்திக் கொள்ளுங்கள் : ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் அறிவுரை..!

'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்பார்கள். நான் எந்த பூமியை ஆளப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை" என்றும் சரத்குமார் பேசினார்.
"Get 'Nattamai Family' tattooed": Actor Sarathkumar advises supporters!
"Get 'Nattamai Family' tattooed": Actor Sarathkumar advises supporters!google,ai
1 min read

பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார், தனது பிறந்த நாள் விழாவில் ஆதரவாளர்களுக்கு வழங்கிய புதுமையான அறிவுரையும், கட்சியின் பொறுப்புகள் குறித்து ஆற்றிய உரையும் ஒருபக்கம் கவனத்தை பெற்றிருந்தாலும், மறுபக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்த நாள் விழாவும் ஆதரவாளர்களுக்கு அறிவுரையும்

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில், கலந்து கொண்ட ஆதரவாளர்களுக்கு விருந்தளித்து நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் உபசரித்தார்.

'நாட்டாமை குடும்பம்' அடையாளம்

பிறந்தநாள் விழாவில் பேசிய சரத்குமார், ஆதரவாளர்கள் தங்கள் கைகளில் 'நாட்டாமை குடும்பம்' எனப் பச்சை குத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

சரத்குமாரின் இந்த வேண்டுகோளை ஏற்று, விழா நடைபெற்ற அரங்கத்திலேயே அவரது ஆதரவாளர்கள் பலர் தங்கள் கைகளில் 'நாட்டாமை குடும்பம்' என பச்சை குத்திக் கொண்டனர்.

சரத்குமாரின் பேச்சு மற்றும் விளக்கங்கள்

உங்கள் "கைகளில் 'நாட்டாமை குடும்பம்' என பச்சை குத்திக் கொள்வது நமது குடும்பத்தின் அடையாளமாக இருக்கும். இது என் சிந்தனையில் திடீரென தோன்றிய எண்ணம். என் மீது பாசம் உள்ளவர்கள் விரும்பினால்

உங்கள் "கைகளில் 'நாட்டாமை குடும்பம்' என பச்சை குத்திக் கொள்ளலாம். திரைப்படப் படப்பிடிப்பு இருப்பதால் நான் இப்போது பச்சை குத்தவில்லை. என்னை நேரடியாக சந்திப்பதற்கு இது ஒரு 'கிரீன் கார்டு' போல இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

நற்பண்புகள் மற்றும் ஆரோக்கியம்

இளைஞர்கள் உட்பட யாரும் தீய பழக்கவழக்கங்களில் ஈடுபடக் கூடாது என்றும், எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதை அளவுடன் செய்ய வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பா.ஜ.க. பொறுப்பு குறித்து

தொடர்ந்து பேசிய அவர், பா.ஜ.க.வில் தனக்கு பொறுப்பு வழங்குவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என கட்சித் தலைமை தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் எந்த பதவிக்காகவும் தான் எங்கும் சென்றதில்லை. சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்கும் எண்ணம் எதுவுமில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

பொறுத்தார் பூமி ஆள்வார்

"என்னுடன் இருப்பவர்கள் அனைவருக்கும் பா.ஜ.க.வில் பொறுப்பு வாங்கிக் கொடுத்துள்ளேன். 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்பார்கள். நான் எந்த பூமியை ஆளப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை" என்றும் அவர் பேசினார்.

இதையும் படிங்க: ”தமிழ் என்றால் கெத்து, ஒரு சொல்லே வரலாறு” : முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் : சமரசமே இல்லை, முதல்வர் விஜய் உறுதி..!

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in