டூப் இல்லாமல் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் “Tom Cruise" : கௌரவ ஆஸ்கர்

Tom Cruise Receives Honorary Oscar at Governors Awards 2025 : ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூசுக்கு வாழ்நாள் சாதனைக்காக, கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது.
Hollywood superstar Tom Cruise awarded an honorary Oscar for lifetime achievement At Governors Awards 2025
Hollywood superstar Tom Cruise awarded an honorary Oscar for lifetime achievement At Governors Awards 2025
1 min read

டாம் குரூஸின் ஆஸ்கர் கனவு

Tom Cruise Receives Honorary Oscar at Governors Awards 2025 : ஹாலிவுட்டின் மிகச்சிறந்த ஹீரோக்களில் ஒருவர் டாம் குரூஸ். மூன்று முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அவருக்கு இந்த உயரிய கௌரவம் கிடைக்கவில்லை.

63 வயதாகும் ஹாலிவுட் நடிகர்

மிஷன் இம்பாசிபிள் சீரிஸ் படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் டாக் குரூஸ். 63 வயதாகும் இவர் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பதில் வல்லவர். எனவே தான் அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்து வருகிறார் டாம் குரூஸ்.

கௌரவ ஆஸ்கர் விருது

இந்தநிலையில், சினிமா துறையில் சாதனைகள் படைத்ததற்காக டாம் குரூசுக்கு, கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. கவர்னர்ஸ் விருது வழங்கும் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இயக்குநர் அலெஜான்ட்ரோ ஜி. இனாரிட்டு இந்த விருதை டாம் குரூஸுக்கு வழங்கினார்.

'பார்ன் ஆன் தி ஃபோர்த் ஆஃப் ஜூலை', 'ஜெர்ரி மக்வைர்' ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான இரண்டு பரிந்துரைகளும், 'மேக்னோலியா' படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பரிந்துரையும் அவருக்கு முன்பு கிடைத்தது.

முதல் ஆஸ்கர் - டாம் குரூஸ் நெகிழ்ச்சி

விருதைப் பெற்றுக்கொண்ட டாம் குரூஸ்(Tom Cruise Oscar), " சினிமா எனக்கு ஒரு தொழில் மட்டுமல்ல, அதுவே என் வாழ்க்கை. அதனால்தான் அது முக்கியமானது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சினிமா மீதான காதல் தொடங்கியது. நான் இருள் சூழ்ந்த ஒரு திரையரங்கில் ஒரு சிறுவனாக இருந்தேன்.

திரையுலகமே எனது வாழ்க்கை

நான் அறிந்திருந்த உலகத்தை விட அந்த உலகம் மிகப் பெரியதாக மாறியது. முழு கலாச்சாரங்களும், வாழ்க்கைகளும், நிலப்பரப்புகளும் என் முன் விரிந்தன. அது என்னுள் ஒரு தீப்பொறியை உருவாக்கியது.

என் கற்பனையை அது கட்டவிழ்த்துவிட்டது. அந்த ஒளிக்கீற்று உலகைத் திறக்க வேண்டும் என்ற ஆசையை என்னுள் ஏற்படுத்தியது, அதை நான் அன்று முதல் பின்தொடர்கிறேன்," என்று டாம் குரூஸ் கூறினார்.

டாம் குரூசுடன் டெபி ஆலன், வின் தாமஸ், டோலி பார்டன் ஆகியோருக்கும் கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. டாம் குரூசுக்கு ஆஸ்கர் விருது கிடைத்து இருப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன. அவருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

==================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in