இனி 18 நாட்களில் சென்சார் சர்டிபிகேட் : விஜய் ரசிகர்கள் குஷி!

திரைப்படங்களுக்கான தணிக்கை சான்றிதழ் வழக்கும் கால அவகாசம் 18 நாட்களாக குறைக்கப்படுவதாக, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அறிவித்து இருக்கிறார்.
Jana Nayagan Issue: Censor certificate in 18 days - Vijay fans are thrilled.
Jana Nayagan Issue: Censor certificate in 18 days - Vijay fans are thrilled.Source : Google
1 min read

சென்சார் பிடியில் ‘ஜனநாயகன்’

நடிகரும், தவெக தலைவருமான விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் விவகாரம் பல சர்ச்சைகளை எழுப்பியது. நீதிமன்றத்தின் பிடியில் வழக்கு இருக்கிறது.

மத்திய அரசு அறிவிப்பு

இந்தநிலையில், தற்போது திரைப்படங்களுக்கான தணிக்கை சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கால அவகாசம் குறைப்பு

இது தொடர்பாக பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன், ”திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கான கால அவகாசம் குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம்

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் தணிக்கை சான்றிதழ் பெற்ற பின்னர் தான் திரைப்படங்களை இந்தியாவில் திரையிட முடியும். அதன்படி மத்திய திரைப்பட வாரியம் பல வரையறைகளைக் கொண்டுள்ளது.

18 நாட்களில் சென்சார் சர்டிபிகேட்

அதன்படி, இனி தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கான கால அவகாசம் 48 நாட்களில் இருந்து 18 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, இந்த பதிலை எல்.முருகன் கூறியுள்ளார்.

வரும் நாட்களில் தியேட்டர் வெளியீட்டிற்காக தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் திரைப்படங்களுக்கு 18 நாட்களுக்குள் தணிக்கை சான்றிதழ் அளிக்க வேண்டும்.

அதேபோல், குறும்படங்களுக்கான தணிக்கை சான்றுக்கான கால அவகாசம் 3 நாட்களில் அளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைத்துறையினர் வரவேற்பு

விஜயின் ஜனநாயகன் உட்பட பல படங்கள் மீதான தணிக்கை சான்றிதழ் விவகார வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்புக்கு திரைத்துறையினர் வரவேற்பளித்துள்ளனர்.

குஷியில் விஜய் ரசிகர்கள்

குறிப்பாக விஜய் ரசிகர்கள் ஜனநாயகன் படம் விரைவில் திரைக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கிடக்கின்றனர்.

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in