Jana Nayagan movie release date update today Vijay's 'JanaNayagan' and Yash's 'Toxic' to release on the same day When?
Jana Nayagan movie release date update today Vijay's 'JanaNayagan' and Yash's 'Toxic' to release on the same day When?source:google

விஜய்யின் 'ஜனநாயகன்', யாஷின் 'டாக்ஸிக்' ஒரே நாளில் வெளியீடு? எப்போது தெரியுமா?

Jaya Nayagan, Toxic Release Date : விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் மற்றும் நடிகர் யாஷின் டாக்ஸிக் திரைப்படமும் ஜூன் 4ஆம் தேதி ஒரே நாளில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
Published on

ஜனநாயகன் வெளியீட்டு தேதி:

நடிகர் விஜய் To தவெக தலைவர் விஜய்

Jaya Nayagan, Toxic Release Date in Tamil : நடிகர் விஜய் தவெக கட்சி தொடங்கி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறார். விஜயின் கடைசி படமான ’ஜன நாயகன்’ பொங்கல் தினத்தன்று வெளியாகும் என நினைத்த ரசிகர்களுக்கு இப்போது வரை ஏமாற்றம் மட்டுமே.

ஜனநாயகன் சிக்கல்

தணிக்கை சான்று பெறுவதில், சிக்கல், வழக்கு , தீர்ப்பு என ஜனநாயகன் ரிலீஸ் தேதி சர்ச்சையாகவே இருந்து வருகிறது.

ஜூன் மாதத்தில் ரிலீசாகுமா? ஜனநாயகன்

தேர்தலுக்கு முன்பே விஜயின் கடைசி படமான ஜனநாயகன் இந்த மாதத்திலாவது திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது ஜூன் மாதம் இத்திரைப்படம் ரிலீசாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

KVN தயாரிப்பு நிறுவனம்

ஜனநாயகன் திரைப்படத்தை KVN தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்துள்ளது. விஜயின் கடைசி படம், பிரம்மாண்டமாக திரையிடலாம் என எண்ணியிருந்த படக்குழுவிற்கு தணிக்கை பிரச்னை காரணமாக வெளியீடு தள்ளிப்போனது.

யாஷ் நடிப்பில் ’டாக்ஸிக்’

சரி, ஜனநாயகன் திரைப்படத்திற்கு முன்பு, யாஷ் நடிப்பில் உருவாயுள்ள டாக்ஸிக் திரைப்படத்தையாவது வெளியிடலாம் என்றால் இப்போது அதிலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு சிக்கல் தான்.

மார்ச் 19ஆம் தேதி வெளியீடு ஒத்துவைப்பு

நடிகர் யாஷ் திரைப்படம் டாக்ஸிக், மார்ச் 19 ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போர் நடந்து வருவதால் இத்திரைப்படத்தின் வெளியீட்டை தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.

யாஷிற்கு உலகளாவிய ரசிகர்கள்

நடிகர் யாஷிற்கு உலகளாவிய ரசிகர்கள் இருப்பதால் அதாவது மேற்கத்திய நாடுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட ரசிகர்கள் இருப்பதால் தயாரிப்பு நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜூன் 4-ல் டாக்ஸிக்

அதன் படி ஜூன் 4 ஆம் தேதி டாக்ஸிக் திரைப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

கோடை விடுமுறையில் ஜனநாயகன்?

இதேபோல் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படமும் சட்டமன்ற தேர்தல் நிறைவு மற்றும் கோடைக்கால விடுமுறையை கருத்தில் கொண்டு வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜனநாயகன், டாக்ஸிக் ஒரே நாளில் வெளியாகுமா?

எனினும் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் மற்றும் நடிகர் யாஷின் டாக்ஸிக் திரைப்படமும் ஜூன் 4ஆம் தேதி ஒரே நாளில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஒரே நாளில் வெளியான பீஸ்ட், கேஜிஃப் 2

ஏனென்றால், கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரில் 13 ஆம் தேதி விஜயின் 'பீஸ்ட்’ திரைப்படமும், அதற்கு அடுத்த நாள் ’கேஜிஎஃப் - 2’ திரைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

logo
Thamizh Alai
www.thamizhalai.in