Jaya Nayagan : 'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது... : தேர்தல் ஆணையம் கையில் முடிவு?

Jaya Nayagan Release Date Update in Tamil : ஜன நாயகன் திரைப்படத்தை இந்திய தேர்தல் ஆணையம் பார்வையிட பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
When will 'Jana Nayagan' be released?  The Election Commission decides?
When will 'Jana Nayagan' be released? The Election Commission decides?source : google
1 min read

When will 'Jana Nayagan' be released? The Election Commission decides?

ஜனநாயகன் ரிலீஸ் எப்போது

ஜன நாயகன் திரைப்படத்தை மறுதணிக்கை செய்த தணிக்கை குழுவினர், இந்திய தேர்தல் ஆணையம் பார்வையிட பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயின் கடைசி திரைப்படம்

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய பின் விஜய்யின் கடைசி படமாக உருவான ஜனநாயகன், ஜனவரி மாதமே வெளியாகவிருந்த நிலையில், தற்போது வரை தணிக்கை சான்று பெறுவதில் இழுபறி நீடித்து வருகிறது.

ஜனநாயகன் - மறுதணிக்கை குழு'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது. பார்வையிடல்

இந்த நிலையில், ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை செய்த தணிக்கை குழுவினர் கடந்த செவ்வாயன்று , மும்பையில் பார்த்து முடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்

இதற்கிடையே தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்சாம் மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

தமிழக தேர்தலில் களமிறங்கும் விஜய்

அதன்படி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுகிறது.

தேர்தல் நடத்தை விதிகள்

தேர்தல் நடைபெற இருக்கும் நேரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜனநாயகன் படத்தில் அரசியல் சார்ந்த கருத்துகள் இருக்கிறது.

அதனால் தேர்தல் ஆணையம் இத்திரைப்படத்தை பார்வையிட வேண்டும் என்று மறுதணிக்கை குழு பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் ஆணையம் கையில் ’ஜனநாயகன்’

மறுதணிக்கை குழுவின் பரிந்துரையின் படி தேர்தல் ஆணையம் கையில் தான் இப்போது ஜனநாயகன் தேர்தலுக்கு முன்பே ரிலீஸ் ஆகுமா? அல்லது தேர்தலுக்குப் பிறகு தான் ரிலீஸ் ஆகுமா? என்பது உள்ளது.

அரசியல் வசனம், கருத்து

ஏனெனில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அரசியல் சார்ந்த கருத்துகள் அல்லது வசனங்கள் படத்தில் இடம்பெற்றிருக்கக் கூடாது.

அதன்படி தேர்தல் ஆணையம் ஜனநாயகன் படத்தை பார்த்துவிட்டு ஆட்சேபனை இல்லை எனக் கூறினால் மட்டும் தான் தேர்தலுக்கு முன்பே படத்தை வெளியிட முடியும்.

தேர்தலுக்கு பின் ஜனநாயகன் ?

ஆனால் ஜனநாயகன் படத்தில் அரசியல் சார்ந்த வசனங்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தான் இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in