டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் 'டோரதி': உலக அளவில் கவனம் ஈர்க்கும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் படம்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'டோரதி' திரைப்படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
Karthik Subbaraj
Karthik Subbaraj source:thamizhalai,ai generated
1 min read

Karthik Subbaraj Directed Dorothy Movie World Premiere at Toronto International Film Festival

டொரண்டோ விழாவில் திரையிடல்

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டோரதி' திரைப்படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (Toronto International Film Festival) உலக அளவில் திரையிடப்படுகிறது.

இவ்விழாவிற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர்கள் ரிஷிகாந்த், சனத் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் டொரண்டோ சென்றுள்ளனர்.

1980-களின் மதுரை பின்னணி

மதுரையைப் பின்னணியாகக் கொண்டு 1980-களில் நடக்கும் கதையாக டோரதி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நட்பு மற்றும் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ரிஷிகாந்த், சனத், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இளையராஜா இசைக்கு பெரும் வரவேற்பு

டோரதி திரைப்படத்தில் இடம்பெற்ற அந்தோணிராஜ் குரலில் வெளியான 'கல்யாண விருந்து', பாடலும், இசைஞானி இளையராஜ குரலில் வெளியான 'முத்துமணி' ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இன்றைய இளைஞர்களும் கொண்டாடும் வகையில் வரிகளும் இசையும் இருப்பதாக இசைஞானி இளையராஜாவைப் ரசிகர்களும் திரைத்துரையினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

டொரண்டோ விழாவில் திரையிடப்பட்ட பிறகு, இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

டொரொண்டோ விழாவில் டோரதி திரைப்படம்

தொழில்துறை முதலிட்டிற்காக முதல்வர் விஜய் நேற்று (10.09.2026) லண்டன் சென்றநிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும் நேற்று தான் பயணித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் டொரொண்டோ விழாவில் டோரதி திரைப்படம் திரையிடப்பட இருப்பதாகவும் அதற்காகத்தான் செல்வதாகவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து ’டோரதி’ திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : பிரிக்ஸ் உச்சி மாநாடு 2026 : மோடியின் அழைப்பை ஏற்று ”18 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு” : டெல்லி விழாக்கோலம்.!

=======

logo
Thamizh Alai
www.thamizhalai.in