பிரிக்ஸ் உச்சி மாநாடு 2026 : மோடியின் அழைப்பை ஏற்று ”18 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு” : டெல்லி விழாக்கோலம்.!

உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள 'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் நாளை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
BRICS summit significant global attention, begins in Delhi tomorrow,18 countries leaders participate
BRICS summit significant global attention, begins in Delhi tomorrow,18 countries leaders participatesource:thamizhalai,ai generated
2 min read

உலகளவில் கூட்டமைப்புகள்

உலகளவில் பல்வேறு நாடுகள் இணைந்து, கூட்டமைப்புகளை ஏற்படுத்தி ஒத்துழைப்பு, நல்லுறவை வலுப்படுத்தி வருகின்றன. உள்ளன. அVஃ / முக்கியமான ஒரு கூட்டமைப்பு தான் 'பிரிக்ஸ்' (BRICS). இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பில் மொத்தம் 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

பிரிக்ஸ் கூட்டமைப்பு

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

பிரிக்ஸ் 18வது உச்சி மாநாடு

இந்த கூட்டமைப்பிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடுகள் தலைமையேற்கும். அந்த வகையில் 'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் 18 வது உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றுள்ளது.

முக்கிய பிரச்சினைகள் - தலைவர்கள் விவாதம்

டெல்லியில் நாளை முதல் 2 நாட்கள் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. வர்த்தகம், முதலீடு, எனர்ஜி, உணவு பாதுகாப்பு, உள்பட பிற உலகளாவிய பிரச்சனைகள் பற்றி தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

டெல்லி வரும் உலகத் தலைவர்கள்

உச்சி மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் டெல்லிக்கு வந்த வண்ணம் உள்ளனர். முதல் ஆளாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டெல்லியில் தரையிறங்கி உள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான், இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாக் எல்-சிசி, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்...

ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான், எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலி, வியட்நாம் பிரதமர் லே மின் ஹங், பிரேசில் வெளியுறவுத்துறை அமைச்சர் மவ்ரோ வியரா ஆகியோர்மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

தலைவர்களுக்கு சிறப்பு அழைப்பு

பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத அதேநேரத்தில் நம் நாட்டுடன் நல்லுறவை பேணக்கூடிய நாடுகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று 8 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷன்கோ

கசகஸ்தான் அதிபர் காஷ்யம் ஜோமார்ட் டோகாயேவ்

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்

தாய்லாந்து பிரதமர் அனுதின் சர்னவிராகுல்

கியூபா அதிபர் மிக்யூ் டியாஸ் கேனல்

நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு

உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்காத் மிர்ஷியோயேவ்

உகாண்டா துணை அதிபர் ஜெசிகா அலுபோ

உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

மாநாட்டில் ஐநா பொதுச் செயலாளர்

இவர்கள் தவிர ஐநா சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியா குட்டரஸ் கலந்து கொள்கிறார். பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு

தலைவர்கள் வந்து இறங்கும் விமான நிலையங்கள், தங்கும் ஹோட்டல்கள் மற்றும் உச்சி மாநாடு நடக்கும் பாரத் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

============

logo
Thamizh Alai
www.thamizhalai.in