

கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’. இப்படத்தின் எடிட்டிங் பணிகள் முடிந்தநிலையில், ஆகஸ்ட் 27-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜே.கே சந்துரு இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதற்கு ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிந்துள்ளார். காமெடி த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.
கீர்த்தி கடைசியாக நடித்த படம் ‘பேபி ஜான்’, இது விஜய் நடித்த தெறி படத்தின் ஹிந்தி ரீமேக். வருண் தவான் கதாநாயகனாக நடித்த இந்தப் படம், கலீஸ் இயக்கத்தில், அட்லீயின் தயாரிப்பில் டிசம்பர் 25, 2024 அன்று திரையரங்குகளில் வெளியானது.