

The people of Pakistan are demanding 80% of the profits from the film Durandhar - 2
துரந்தர் தி ரிவெஞ்ச்
Pakistan's Lyari Claims 80% Of Dhurandhar Movie Profit : துரந்தர் படத்தின் 80 சதவீத வருவாயை பாகிஸ்தானின் லியாரி பகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதித்யா தார்,ரன்வீர் சிங்
கடந்த மார்ச் 19ஆம் தேதி ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் தி ரிவெஞ் திரைப்படம் பாகிஸ்தானின் லியாரி பகுதியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.
உலகளவில் சாதனை
உலகளவில் அதிவேகமாக ரூ.1,000 கோடி வருவாயை துரந்தர் தி ரிவெஞ்ச் ஈட்டியுள்ளதால், இதில் 80% வருவாயை பாகிஸ்தானின் லியாரி பகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லியாரி மக்களின் கோரிக்கை
லியாரி பகுதியில் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும் அவற்றை மேம்படுத்துவதற்காக துரந்தர் திரைப்படத்தின் வருவாயில் இருந்து 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்தான வீடியோ சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.
படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில் உலகளவில் துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம் ரூ.1365 கோடி வசூலித்துள்ளதாகவும் இந்தியாவில் மட்டும் ரூ.1023 கோடி வசூலித்து உள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எனினும் லியாரி மக்களின் கோரிக்கை குறித்து படக்குழுவினர் அந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
======