"துரந்தர் 2" திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது : சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு...!

இத்திரைப்படம் கடந்த மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்த நிலையில் அதனை தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றதில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட்டது
Madras High Court refuses to ban the film 'Dhuranthar 2'
Madras High Court refuses to ban the film 'Dhuranthar 2' google
1 min read

திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது : நீதிபதி

பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி ‘துரந்தர் 2’. இத்திரைப்படம் கடந்த மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான்து.

இத்திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது

தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி

இத்திரைப்படம் கடந்த மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்த நிலையில் அதனை தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றதில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் , அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது

மனுதாக்கல் விவரம்

மதுரையைச் சேர்ந்த டி. ராகேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்த நிலையில் , அதில் தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் அமலில் உள்ள நிலையில்,

இப்படத்தில் அரசியல் தொடர்பாக ஒரு சார்பான கருத்துகள் இருப்பதால் ‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் தற்போதைய நிலையில் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

எதிர் கருத்து என் குறிப்பிட்டு வாதாடல்

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மதாதிகாரி, நீதிபதி அருள் முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில் , மனுதாரர் சார்பில், தமிழகத்திலும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு கொள்கைகளை இப்படம் பாராட்டும் வகையில் உள்ளது.

இத்திரைப்படத்தின் திரையிட்டிருப்பது, நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது கோரி அதை தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும் என கூறி வாதம் முன்வைக்கப்பட்டது

மனு தள்ளுபடி செய்து தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் வழங்கிய சான்றிதழை மனுதாரர் எதிர்க்கவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in