அரைவட்ட வடிவில் மாணவர் இருக்கை : மாற்றத்தை ஏற்படுத்திய கேரள படம்

Sthanarthi Srikuttan Movie Inspiration : பள்ளிகளில் கடைசி பெஞ்ச் என்பதே இருக்க கூடாது என்பதை குறிக்கும் வகையில், மலையாள படமான 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Malayalam film 'Sthanarthi Srikuttan' has brought a change
Malayalam film 'Sthanarthi Srikuttan' has brought a change, no last bench in schools
1 min read

பள்ளிகளில் மாணவர்கள் இருக்கை :

Sthanarthi Srikuttan Movie Inspiration : பொதுவாக பள்ளிகளில் மாணவர்கள் இருக்கை வரிசையாக இருக்கும். நன்றாக படிக்கும் மாணவர்கள் முதல் பெஞ்சிலும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் கடைசி பெஞ்சிலும் அமர்ந்து இருப்பார்கள். இதை குறிக்கும் பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.

'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' மலையாள படம் :

ஆனால், மலையாள திரைப்படம் ஒன்று பெஞ்ச் முறையில் மாற்றத்தை கொண்டு வர காரணமாக அமைந்திருக்கிறது. இயக்குனர் வினேஷ் விஸ்வநாத் இயக்கிய 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' திரைப்படம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியின் அன்றாட நிகழ்வுகளை தத்ரூபமாக படமாக்கி உள்ளது.

பெஞ்ச் வரிசையால் பேதம் :

பெஞ்ச் வரிசை மாணவர்களை வேறுபடுத்தி காட்டுவதாகவும், அதை தவிர்த்து அரை வட்ட வடிவில் அவர்களை அமர வைத்தால், ஆசிரியர் அனைவரும் பார்த்தவாறு, பேதமின்றி பாடம் எடுக்க முடியும் என்று இந்தப் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.

மாற்றம் கொண்டு வந்த திரைப்படம் :

திரைப்படமாக இருந்தால், அதில் உள்ள நல்ல கருத்தினை அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதை பரிசீலித்த கேரள அரசு(Kerala Govt School) சில அரசு பள்ளிகளில் வரிசை பெஞ்ச் முறையை மாற்றி, அரைவட்ட பெஞ்ச்(School Bench Arrangements) முறையை கொண்டு வந்துள்ளது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in