AI தொழில் நுட்பத்தில் "மீலாதுன் நபி": நபிகள் வரலாறு பேசும் காவியம்

Milad Un Nabi 2025 Movie Making With AI Technology : முஹம்மது நபிகளின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘மீலாதுன் நபி’ திரைப்படம் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
Milad Un Nabi 2025 Movie Making With AI Technology in Tamil
Milad Un Nabi 2025 Movie Making With AI Technology in Tamil
1 min read

மீலாதுன் நபி திரைப்படம் :

Milad Un Nabi 2025 Movie Making With AI Technology : திரைப்படங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடிகர், நடிகைகள் இல்லாமல், முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, "மீலாதுன் நபி" ஆவணத் திரைப்படம்(Milad Un Nabi Documentary) உருவாக்கப்பட்டு இருக்கிறது.

கதை, வசனம், இயக்கம் மில்லத் அகமது

சிங்கப்பூர் எழுத்தாளரான மில்லத் அகமது பாடல்கள், திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி, தயாரித்து இருக்கிறார். இது முற்றிலும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஆவணத் திரைப்படம்(Milad Un Nabi Documentary Film) ஆகும்.

நபிகளினை வரலாறு கூறும் திரைப்படம்

இந்தப் படம் குறித்து விளக்கிய எழுத்தாளர் மில்லத் அகமது, “திருக்குர்ஆன், ஹதிஸ் ஆகியவற்றின் ஆதாரத்துடன் இந்தப் படத்தை தயாரித்து இருப்பதாக கூறினார். மாணாவர்கள், இளைஞர்கள், நபிகளின் வாழ்க்கையைப்(Milad Un Nabi Biopic) பற்றி அறிய விரும்பும் ஆர்வலர்கள் அனைவரும் அவசியம் காண வேண்டிய படம்.

ஏஐ தொழில்நுட்பம் மூலம் கதாபாத்திரங்கள்

இதன் கதை மூன்று கோணங்களில் சொல்லப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். முழுக்க முழுக்க முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படம்(Mohammad Nabi Biography). இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் நடிகர்கள் இல்லாமல் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

10 பாடல்கள், சிறப்பான கதை

ஏஐ கதாபாத்திரங்கள் மூலமும், சென்னையில் புகழ்பெற்ற இமாம்கள் அப்துல் கையூம், உமர் ரிழ்வான், சதக்கத்துல்லா மூலமும், பத்து பாடல்களை கொண்டு கதை நகர்கிறது. இந்தப் பாடல்களை நாகூர் ஹனிபா மகன் நவுஷாத் ஹனிபா, ஜென்டில்மேன் சம்சுதீன், யூடியூப் புகழ் ரஹீமா பேகம், விஜய் சூப்பர் சிங்கர் பரிதா பாடியுள்ளனர்.

மேலும் படிக்க : ”ஊழலுக்கு 100% முற்றுப்புள்ளி” : அல்பேனியாவில் ’AI’ அமைச்சர்

ஒரே இசைக்கருவி மூலம் மியூசிக்

எஸ்.ஆர்.ராம் இசையமைத்துள்ளார். கமர்சியல் இசை இல்லாமல் ஒரே ஒரு இசைக்கருவியை வைத்து பக்தி பரவசமூட்டும் வகையில் இசையமைக்கப்பட்டு இருக்கிறது. லலித் ராகவேந்தர், மில்லத் அகமது ஒளிப்பதிவு செய்துள்ளனர். அக்டோபர் 10ம் தேதி படத்தை திரையிடும்(Milad Un Nabi AI Movie Release Date) வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன ” என்று எழுத்தாளர் மில்லத் அகமது விளக்கினார்.

========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in