‘M.S - A Legacy On Screen’ எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா: கமல்ஹாசன் சொன்ன அறிவுரை!

எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தின் தொடக்க விழாவில் கமல்ஹாசன், ராஷ்மிகா பேசிய பேச்சுக்கள் மற்றும் தகவல்கள்.
M.S - A Legacy On Screen
M.S - A Legacy On Screensource:thamizhalai,google
1 min read

M.S - A Legacy On Screen

மறைந்த கர்நாடக இசைக்கலைஞர் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு M.S - A Legacy On Screen என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கப்படுகிறது.

இத்திரைப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தைக் கெளதம் தின்னனுரி இயக்க, அனிருத் இசையமைக்கிறார். அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.

திரைப்படத்தை தொடங்கி வைத்த கமல்ஹாசன்

எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் கிளாப் அடித்து இத்திரைப்படத்தைத் தொடங்கி வைத்தார்.

நன்றியுணர்வு மட்டுமே உள்ளது

இவ்விழாவில் பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா "என் மனதில் தற்போது நன்றி உணர்வு மட்டுமே உள்ளது. எம்.எஸ். அம்மாவின் பிறந்தநாளைக் கொண்டாட அனைவரும் கூடியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

இறைத்தன்மை கொண்ட குரல்

தொடர்ந்து பேசிய அவர் அம்மாவின் குரலில் தனித்துவமான தெய்வீக சக்தி இருக்கிறது. அதை கேட்கும்போது கடவுளின் முன் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படும். உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறிய பகுதியாக என்னை தேர்வு செய்ததற்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

முழுமையான அர்ப்பணிப்பு

எம்.எஸ். அம்மா, உங்களது ஆசி, சதாசிவம் சார் மற்றும் சண்முக வடிவு அம்மாவின் ஆசியுடன், இந்த படத்திற்காக என் சிறந்த பங்களிப்பை வழங்குவேன் என ராஷ்மிகா மந்தனா பேசினார்.

தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சி

இவ்விழாவில் கலந்துகொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்த நடிகர் கமல்ஹாசன், தென்னிந்திய சினிமா ஒவ்வொரு மாநிலத்திலும் மொழிமாற்றம் செய்யத் தேவையில்லாத அளவுக்கு வளர்ந்துள்ளது. சென்னை அடையாளமாக இருந்தது போல், பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தும் மாற வேண்டும்.

என்னால் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்க முடியாது

என்னால் மீண்டும் அவ்வை சண்முகியாக நடிக்க முடியும், ஆனால் தாடியை எடுத்தாலும் என்னால் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்க முடியாது. அதை நீங்கள் (ராஷ்மிகா) தான் செய்ய வேண்டும்.

மைக்கேல் ஜாக்சன் போன்ற உலகளாவிய ஆளுமையின் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது ஒரு நடிகருக்கு என்ன பதற்றம் இருக்குமோ, அதே பதற்றம் இதிலும் இருக்கும் என்றார்.

ராஷ்மிகாவுக்கு கமல்ஹாசன் அறிவுரை

கிடைத்த வாய்ப்பிற்கு உயிரைக் கொடுத்து நடிக்காமல், உழைப்பைக் கொடுத்து நடிக்க வேண்டும். எம்.எஸ். அம்மாவைப் போல உங்களது கண்ணில் அந்த இரக்கத்தைக் கொண்டுவந்தால் பாதி போரில் வெற்றி பெற்ற மாதிரி. அதை தைரியமாகச் செய்யுங்கள் என்றார்.

இத்திரைப்படத்தில் முன்னதாக சாய் பல்லவி நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தனா நடிப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் தமிழ்த் திரைப்படம்: சாதனை படைக்கும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’!

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in