

கோவா சர்வதேச திரைப்பட விழா
My Melbourne Movie Screened in Goa Film Festival 2025 : இந்திய சர்வதேச திரைப்பட விழாவான IFFI ஆண்டுதோறும் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகின்றன. கோவா சர்வதேச திரைப்பட விழா என்றும் அழைக்கப்படும் இந்த நிகழ்வு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் நேற்று தொடங்கியது. இதில் 10க்கும் மேற்பட்ட அரங்குகளில் 40 க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
சிதாரா எனும் கிரிக்கெட் வீராங்கனையின் படம்
இந்த நிலையில் விழாவின் இரண்டாவது நாளான இன்று ஆஸ்திரேலியா நாட்டுடன் இணைந்து இந்தியா தயாரித்துள்ள “த மெல்பர்ன்” என்ற ஆந்தாலாஜி திரைப்படம் திரையிடப்பட்டது. இதில் நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன. அதில் “சிதாரா” என்ற ஒரு கதையானது ஆப்கானிஸ்தானின் மகளிர் கிரிகெட் வீரரான சிதாராவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் கபீர்கான் இயக்கியுள்ளார். அடிப்படையில் ஒரு கிரிக்கெட் வீரரான சிதாரா தாலிபான்களிலிடம் இருந்து தப்பி ஆஸ்திரேலிவில் தஞ்சம் அடைகிறார்.அங்கு அவரின் கிரிக்கெட் திறமையை அடையாளம் கண்டுகொண்ட ஆஸ்திரேலியா அவரை கிரிக்கெட் வீரராக உருவாக்குகிறது.
கைதட்டி நெகழ்ச்சியை வெளிப்படுத்திய ரசிகர்கள்
ஆப்கானில் அனுபவித்த துயர பதிவுகள், சமூக ரீதியான கட்டுபாடுகளை கடந்து சிதாரா எப்படி வெற்றிகரமான கிரிக்கெட் வீரராகிறார் என்ற உண்மைக்கதையை இது பேசுகிறது.
இக்குறும்படத்தை திரையில் பார்த்த ரசிகர்கள் படத்தின் நிறைவின் போது கைத்தட்டி ஆராவரமுடன் நெகிழ்ச்சியை தெரிவித்தனர். தொடர்ந்து இப்படத்திற்கான கதையை தேர்ந்தெடுத்த விதத்தை தயாரிப்பாளர் மிட்டா பவுனிக் மற்றும் இயக்குனர் கபீர்கான் ஆகியோர் பகிர்ந்துகொண்டனர். நேற்று தொடங்கிய 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைய உள்ளது.
இந்தியாவில் இருந்து எத்தனை படங்கள் திரையிடப்படும்
சர்வதேச திரைப்பட விழா என்றால் எதிர்பார்ப்பு உச்சம் தொடும் நிலையில், அதில் ஒளிபரப்பபடும் திரைப்படங்களும் நிக்ழ்ச்சியில் பங்கேற்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தும். தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்படும் சில படங்கள், விருதுகளையும் பெரும். இந்நிலையில், பல படங்கள் விருதுக்கு உரிய மரியாதையையும், அந்தஸ்தையும் தாண்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தும். 27 ஆம் தேதி வரை நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் எத்தனை படங்கள் ஒளிப்பரப்பட்டு பேசு பொருளாக மாறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.