

வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்
Netflix Announces Deal to Acquire Warner Bros. Discovery Bid : 1923ம் ஆண்டு நான்கு சகோதரர்களால் நிறுவப்பட்டது வார்னர் பிரதர்ஸ், சினிமா தயாரிப்பு நிறுவனம். நூற்றாண்டை கடந்து, தரமான படைப்புகளின் மூலம் உலகளவில் கோடிக்கான மக்களின் அபிமானத்தை பெற்று வருகிறது.
விலைக்கு வந்த வார்னர் பிரதர்ஸ்
இந்நிலையில், வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் விற்பனைக்கு வருவதாக அறிவிப்பு வெளியானது. விலைக்கு வாங்க உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டன. இதில், நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெற்றி பெற்று இருக்கிறது.
7 லட்சம் கோடிக்கு விற்பனை
அதாவது 72 பில்லியன் அமெரிக்க டாலர்கள் விலைக்கு, ( இந்திய ரூபாய் மதிப்பில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 630 கோடி) கையகப்படுத்தும் ஒப்பந்தம் இறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை அடுத்த 12 முதல் 18 மாதங்களில் வார்னர் பிரதர்ஸ் உரிமையாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வழங்கும்.
நெட்பிளிக்ஸ் வசமாகும் படங்கள், ஓடிடி, டிஸ்கவரி சேனல்
வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட ஹாரி பாட்டர் திரைப்படங்கள், டிசி சூப்பர் ஹீரோ படங்கள், கேம் ஆஃப் த்ரோன்ஸ் உள்ளிட்ட வெப் சீரிஸ், ஸ்கூபி டூ, டாம் அண்ட் ஜெர்ரி காமிக்ஸ், ஹெச்.பி.ஓ. மேக்ஸ் ஓடிடி தளம், டிஸ்கவரி சேனல் ஆகியவற்றின் உரிமை நெட்ஃபிளிக்ஸ் கைக்கு அதிகாரப்பூர்வமாக வரும்.
பொழுதுபோக்கு துறையின் ஜாம்பவான்
இந்த ஒப்பந்தம் கையைழுத்தாகி, வார்னர் பிரதர்ஸ் கைக்கு வருவதால், நெட்பிளிக்ஸ் நிறுவனம் பொழுதுபோக்கு துறையில் உலகின் பெரிய ஜாம்பவனாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026ல் கை மாறுகிறது
வார்னர் பிரதர்ஸ் நிறுவனப் பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு $27.75 vஈதம் பணமாகவும் மற்றவை நெட்ஃப்ளிக்ஸ் பங்காகவும் வழங்கப்படும். சிஎன்என், டிபிஎஸ் போன்ற கேபிள் டிவி சேனல்கள், ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு முன்னர் தனியாகப் பிரிக்கப்படும். இந்த ஒப்பந்தம் 2026ம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொழுதுபோக்கு துறையில் செல்வாக்கு
வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் சொத்துக்களுடன் நெட்ஃபிக்ஸ் இணைவது, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறை தொழிற்சங்கங்கள் மீது அதிக செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு மாபெரும் நிறுவனமாக நெட்பிளிக்ஸ் மாறும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
=======