ஆஸ்கர் In Memoriam : தர்மேந்திரா பெயர் இடம்பெறாததால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்!

Oscar 'In Memoriam : BAFTA 2026 விழாவின் நேரடி ஒளிபரப்பில் தர்மேந்திராவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது
Oscar 'In Memoriam': Indian Fans Disappointed as Dharmendra's Name Is Omitted in Oscar Awards 2026 List!
Oscar 'In Memoriam': Indian Fans Disappointed as Dharmendra's Name Is Omitted in Oscar Awards 2026 List!source:google
1 min read

Oscar award 2026:

ஆஸ்கர் விருது விழாவின் 'இன் மெமோரியம்' அஞ்சலிப் பகுதியில் தர்மேந்திரா பெயர் இடம்பெறாததால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஆஸ்கர் இன் மெமோரியம்

ஆஸ்கர் இன் மெமோரியம் என்பது திரைத்துறையில் மறைந்த மிகப்பெரிய ஆளுமைகளுக்கு, சாதனையாளர்களுக்கு ஆஸ்கர் மேடையிலேயே அஞ்சலி செலுத்தும் முக்கிய நிகழ்வாகும்.

விடுபட்ட தர்மேந்திரா பெயர்

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 98-வது ஆஸ்கர் விருது விழாவின் 'இன் மெமோரியம்' அஞ்சலிப் பகுதியில், பாலிவுட் நடிகரும் இந்தியத் திரையுலகின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் தர்மேந்திரா பெயர் இடம்பெறவில்லை.

இது இந்திய ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

ஆஸ்கர் Digital Tribute

இருப்பினும், ஆஸ்கர் அகாடமியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட விரிவான அஞ்சலிப் பட்டியலில் (Digital Tribute) இந்திய திரையுலகின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் நடிகர் தர்மேந்திராவின் பெயர் இடம்பெற்றது.

சரோஜா தேவி

மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரையுலகின் கன்னடத்து பங்கிளி என்றழைக்கப்படும் பழம்பெரும் நடிகை சரோஜாதேவியின் பெயரும்

கோட்டா சீனிவாச ராவ்

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் 750 மேற்பட்ட திரைப்படங்களில் வில்லனாகவும் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்த கோட்டா சீனிவாச ராவ் பெயரும் இடம்பெற்றது.

பிற இந்திய கலைஞர்கள் பெயர்

மேலும், புகழ்பெற்ற இந்திய ஆவண பட இயக்குநனரான எஸ். கிருஷ்ணசாமி உள்ளிட்ட பிற இந்தியக் கலைஞர்களின் பெயர்கள் இடம்பெற்று கௌரவிக்கப்பட்டன.

BAFTA 2026 -ல் தர்மேந்திராவிற்கு அஞ்சலி

மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் பெயர் ஆஸ்கரில் விடுபட்டிருந்தாலும், இந்த ஆண்டு நடைபெற்ற பிரிட்டிஷ் அகாடமி விருதுகளான BAFTA 2026 விழாவின் நேரடி ஒளிபரப்பில் தர்மேந்திராவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in