மறுதணிக்கைக்கு செல்லும் "ஜனநாயகன்" : இம்மாத இறுதிக்குள் ரிலீஸ்!

விஜய் நடித்த ’ஜனநாயகன்’ படம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், மறு தணிக்கைக்கு அனுப்ப தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
pending case Vijay's film 'Jananayagan', production company decided to send it for re-censorship.
pending case Vijay's film 'Jananayagan', production company decided to send it for re-censorship.Google
2 min read

நடிகர் விஜயின் ’ஜனநாயகன்’

Vijay's "Jana Nayagan" Sent To Revising Committee : தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, சட்டசபை தேர்தலை முதன்முறையாக எதிர்கொள்ள இருக்கிறார் நடிகர் விஜய். KVN நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடித்த ’ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையின் போது ரிலீசாக இருந்தது.

விஜய் கடைசி படம் ’ஜனநாயகன்’

விஜயின் கடைசி படமாக உருவாகியிருக்கிறது, ஜனநாயகன். இந்த படத்தை ஹெச்.வினொத் இயக்கியிருக்கிறார். கேவிஎன் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் அளிக்கப்படவில்லை.

நீதிமன்றத்தில் ’ஜனநாயகன்’

எனவே சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிக்கு குழு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா படத்திற்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சென்சார் போர்டு மேல்முறையீடு

இதை எதிர்த்து, தணிக்கை வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் அளித்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி அமர்வு, தனி நிதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

கைவிரித்த உச்ச நீதிமன்றம்

இதையடுத்து, கேவிஎன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. அங்கு வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை நீதிமன்றத்தின் வழக்கில் தலையிட விருப்பமில்லை என்று தெரிவித்து விட்டது.

சென்னை நீதிமன்றத்தில் ’ஜனநாயகன்’

இதனால், வேறு வழியின்றி மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே ஜனநாயகன் பட வழக்கானது நடந்து வருகிறது. கடைசியாக சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், தனி நீதிபதியின் ‘சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும்’ என்கிற தீர்ப்பு ரத்து செய்யப்பட்டிருந்தது.

அதோடு, இந்த வழக்கை, தனி நீதிபதியே விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. gனவே, இரு தரப்பிலும் முடியாத போராட்டமாக வழக்கு நிற்கிறது.

மறுதணிக்கைக்கு செல்லும் “ஜனநாயகன்”

பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஜனநாயகன் திரைப்படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்புகிறதுது KVN நிறுவனம். இதனால் இன்னும் ஒரு வாரத்தில் அப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய குழு படம் பார்க்கும்

ஏற்கனவே படத்தை பார்த்த ஐவர் குழுவிற்கு பதிலாக வேறு ஒரு குழு படத்தை பார்த்து தணிக்கை சான்றிதழ் வழங்கும். பிப்ரவரி 13ம் தேதிக்குள் மறுதணிக்கை சென்றுள்ள ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டால், படத்தை பிப்ரவரி 19 அல்லது 20ஆம் தேதிகளில் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு உள்ளது.

அனுமதி கிடைத்தால் ரிலீஸ்

பிப்ரவரி இறுதிக்கு பிறகு அனுமதி கிடைத்து, அதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால், ஜனநாயகன் ரிலீஸ், மே மாதம் வரை தள்ளிப்போகும் வாய்ப்புள்ளது.

‘ஜனநாயகன்’ அரசியல்வாடை

ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். முக்கிய கேரக்டர்களில் நரேன், பிரியாமணி, பாபி டியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது, அரசியலில் நுழையும் முன்பு விஜய் நடித்திருக்கும் கடைசி படம் என்பதால், அரசியல் வாடை கடுமையாகவே இருக்கும், மத்தியில் பாஜக, மாநிலத்தில் திமுகவை சீண்டும் வகையில் வசனங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

=============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in