ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் கிளிம்ப்ஸ் வெளியீடு : வைரலாகும் காணொலி!

Rajinikanth-Kamal New Movie Co-Starring Glimpse Release : ரஜினி, கமல் நடிக்கும் புதிய படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரெட் ஜெயன்ட் யூடியூப் பக்கத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
Rajinikanth-Kamal Haasan new movie co-starring Glimpse release Video goes viral in Tamil
Rajinikanth-Kamal Haasan new movie co-starring Glimpse release Video goes viral in TamilSource : Google
1 min read

ரெட் ஜெயண்ட் மூவிஸ் பதிவு

Rajinikanth-Kamal New Movie Co-Starring Glimpse Release : இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், “வரலாறு எப்போதாவது திரும்பும். அப்படி நடக்கும்போது, அந்த கொண்டாட்டம் தலைமுறைகள் தாண்டி நீடிக்கும். இரண்டு லெஜண்ட் நடிகர்கள் ஒன்றிணைவது ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்கு பெருமையையுடன் கூடிய உணர்வு பூர்வமான தருணம். கமல்ஹாசனையும், ரஜினியையும் திரையில் பார்த்து கொண்டாடி வளர்ந்தவர்கள் நாம். இந்த வரலாற்று நிகழ்வை சாத்தியமாக்கிய இயக்குநர் நெல்சனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரம் இந்த கொண்டாட்டத்தில் கூடுதல் ஒளி சேர்க்கும் அனிருத்துக்கும் நன்றியை கூறிக்கொள்கிறோம். சரியாக 12.07 மணிக்கு படத்தின் புரோமோ வீடியோ வெளியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி கமல் படத்தை இயக்கும் நெல்சன்

ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினி தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். அடுத்து அவர் ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தியுடன் இணைந்து புதிய படத்தில் பணியாற்ற இருக்கிறார். அதன் பிறகே ரஜினி - கமல் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.கமலை பொறுத்தவரை தெலுங்கு படமான ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடிக்கிறார். அன்பறிவு படமும் நிலுவையில் உள்ளது. கமல் - ரஜினி நடிக்கும் படம் அடுத்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

கிளிம்ப்ஸ் வெளியிடு

தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் குறிப்பிட்டது போல், மதியம் 12.07 க்கும் கிளிம்ஸ் வீடியோ வெளியிட்டனர். அதன்படி, எக்ஸ் தளத்தில் Born Cool. Built Retro. Eternal Swag எனும் வாக்கியத்துடன் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளளனர். இதனை யூடியூப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளதை அடுத்து, வெளியான 35 நிமிடத்தில் 3 ஆயிரம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், எனது நண்பர் @Rajinikanth உடன் ஒரு சிறப்பு சந்திப்பு, ஒவ்வொரு சிறந்த பயணமும் இன்னொரு அத்தியாயத்திற்கு தகுதியானது என்றும் @NelsonDilpkumar மற்றும் @AnirudhOfficialமற்றும் இந்த ஒத்துழைப்பை வலுப்படுத்திய @RedGiantMovies ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in