

Rajinikanth's 'Jailer 2': A box office record—surpassing 750 crores in 13 days!
'ஜெயிலர் 2' சாதனைப் பயணம்
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படம், திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்று திரையரங்குகளில் வசூலை குவித்து வருகிறது.
காமெடி - ஆக்ஷன் கலவையில் ரசிகர்களைக் கவர்ந்த இத்திரைப்படம், தமிழ் சினிமா வரலாற்றிலேயே 700 கோடி ரூபாய் வசூலைக் கடந்த முதல் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது. தற்போது 13 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் 750 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனையைப் புதுப்பித்துள்ளது.
இந்திய அளவில் மொத்த வசூல்
13 நாட்கள் முடிவில் இந்தியாவில் இப்படத்தின் மொத்த வசூல் ரூ. 486.50 கோடியாகவும், நிகர வசூல் ரூ. 415.65 கோடியாகவும் உள்ளது.
அதேபோல் சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ஜெயிலர் 2 திரைப்படம், வெளிநாடுகளில் மட்டும் ரூ. 257.80 கோடியை சேகரித்துள்ளது.
'ஜெயிலர் 2' உலகளாவிய வசூல்
இதன் மூலம் இப்படத்தின் உலகளாவிய வசூல் அதிகாரப்பூர்வமாகத் ரூ. 744 கோடியை எட்டியுள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி ரூ. 802 கோடி வரை எட்டி சாதனை படைத்து வருகிறது.
5 மொழிகளிலும் மாபெரும் ஆதிக்கம்
டைகர் முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த் ஆக்ஷனில் மிரட்டியுள்ள இத்திரைப்படம் தமிழ்நாட்டைத் தாண்டி பிற மாநிலங்களிலும் மாபெரும் வசூல் மழை பொழிந்து வருகிறது.
தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 முக்கிய மொழிகளின் பாக்ஸ் ஆபீஸிலும் தனித்தனியாக ரூ. 50 கோடி வசூலைக் கடந்து 'ஜெயிலர் 2' புதிய வரலாறு படைத்துள்ளது.
இதையும் படிங்க : உலகிலேயே முதன்முறையாக துபாயில் 24 காரட் தங்க நடைபாதை: அடுத்த 2 மாதங்களில் திறக்கப்பட திட்டம்!
==========================