

Dubai 24 Karat Gold Walkway Deira Project
துபாய் தெய்வரா பகுதியில் உலகிலேயே முதன்முறையாக 24 காரட் சுத்தமான தங்கத்திலான நடைபாதை அடுத்த 2 மாதங்களில் திறக்கப்படவுள்ளது.
தங்க நகரத்தின் புதிய பிரம்மாண்ட சாதனை
மேற்காசியாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் நகரம், உலகின் வணிகம் மற்றும் சுற்றுலா தலைநகராக விளங்கி வருகிறது. குறிப்பாக தங்க நகைகளின் கூடாரமாகத் திகழும் துபாயில் தங்கம் மற்றும் நகைகள் வாங்குவதற்கு வரி கிடையாது.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு கடுமையான வரிகள் இல்லாததால், உலகின் பல நாடுகளை விட துபாயில் தங்கம் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதற்கு துபாயைத் தேடிச் செல்கின்றனர்.
தெய்ரா தங்க விற்பனை மாவட்டம்
தங்க வர்த்தகத்தை மேலும் ஊக்குவிப்பதற்காக துபாயின் தெய்வரா (Deira) பகுதியில் 'தங்க விற்பனை மாவட்டம்' இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது.
தங்கம், ஆபரணங்கள், மொத்த வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான 1,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் இங்கு இடம்பெற்றுள்ளனர்.
உலக சாதனை முயற்சி
இந்த தங்க நகரின் அந்தஸ்தை மேலும் மெருகூட்டும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கிலும் உலகிலேயே மிக நீளமான 24 காரட் சுத்தமான தங்கத்திலான நடைபாதை கட்டப்பட்டு வருகிறது.
அடுத்த 2 மாதங்களில் திறப்பு விழா
உலகிலேயே முதல் முறையாக உருவாக்கப்பட்டு வரும் இந்த 24 காரட் தங்க நடைபாதை கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த பிரம்மாண்ட தங்க நடைபாதை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.1,000 நோட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி! : ரூ.5,451 கோடி 2,000 நோட்டு சர்ச்சை பின்னணி என்ன?
==============