Rajini 173:கமல் தயாரிக்கும் ரஜினி படம்: சிபி சக்கரவர்த்தி இயக்கம்

Thalaivar 173 Movie Director Cibi Chakaravarthi : கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவரத்தி இயக்குகிறார் என, ராஜ்கமல் நிறுவனம் அறிவித்துள்ளது.
Rajkamal Productions announced Don director Sibi Chakravarthy will direct Rajinikanth's film, which is being produced by Kamal Haasan.
Rajkamal Productions announced Don director Sibi Chakravarthy will direct Rajinikanth's film, which is being produced by Kamal Haasan.
1 min read

ரஜினி படம், கமல் தயாரிப்பு

Rajinikanth's next film, Thalaivar 173, will be produced by Kamal Haasan and Director Cibi Chakaravarthi : நடிகர் ரஜினிகாந்தின் 173ஆவது திரைப்படத்தை கமல்ஹசானின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்குவார் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்தார். படத்தின் ஹீரோவான ரஜினிகாந்த்துக்கு பிடித்த கதை வரும் வரை காத்திருப்பேன் என தயாரிப்பாளர் கமல்ஹாசன் கூறியிருந்தார்.

கதை கேட்ட ரஜினிகாந்த்

பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், ஓ மை கடவுளே, டிராகன் படங்களின் மூலம் கவனம் பெற்ற அஷ்வத் மாரிமுத்து, மகாராஜா படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன்.. டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ஆகியோரிடம் ரஜினிகாந்த் கதை கேட்டதாக தெரிகிறது.

ரஜினியை இயக்கும் சிபி சக்கரவர்த்தி

இந்நிலையில் இந்த படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார். டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இதை ராஜ்கமல் இன்டர்நேஷ்னல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயனை இயக்கிய சிபி சக்கரவர்த்தி

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் 'டான்'. இந்தப் படத்தின் வெற்றியால் சிபி சக்ரவர்த்தி பரவலாகப் பேசப்பட்டார்.

ரஜினியின் ஜெயிலர் - 2

ரஜினி தற்போது ’ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் . அதனை முடித்துவிட்டு கமல் தயாரிக்கும் தனது 173-வது படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். அதன் இயக்குநரும் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்-ரஜினி இணைந்து நடிக்கும் படம்

ரஜினி 173 -ஐ தொடர்ந்து ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம் தொடங்கும் எனத் தெரிகிறது. இப்படத்தினை நெல்சன் இயக்குவது உறுதியாகி இருக்கிறது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in