இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெற்ற நடிகரானார் ”ரன்வீர் சிங்” : 'துரந்தர்' படத்திற்காக புதிய சாதனை!

நடிகர் ரன்வீர் சிங் 'துரந்தர்' படத்திற்காக ரூ. 325 கோடி சம்பளம் பெற்று இந்தியத் திரையுலகில் புதிய சாதனை படைத்துள்ளார். முழு விவரம் !
Ranveer Singh becomes India's highest-paid actor: Sets a new record for the film 'Dhurandhar'!
Ranveer Singh becomes India's highest-paid actor: Sets a new record for the film 'Dhurandhar'!source: Ai generated
1 min read

சாதனை படைத்த துரந்தர் - ரன்வீர் சிங்

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியான இத்திரைப்படம், இந்தியத் திரைப்பட வரலாற்றில் மிக பிரம்மாண்டமான வசூலைக் குவித்து சாதனை படைத்தது.

ரன்வீர் சிங்கின் ‘டான் - 3’

இதனைத் தொடர்ந்து, தற்போது ரன்வீர் சிங்கின் மார்க்கெட் மதிப்பும், அவரது சம்பளமும் உச்சத்தைத் தொட்டுள்ளது. இவர் தற்போது தனது அடுத்த திரைப்படமான ‘டான் - 3’ படப்பிடிப்பையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

லாபப் பங்கீடு முறையில் ஜாக்பாட்

'துரந்தர்' திரைப்படங்களின் இரண்டு பாகங்களுக்கும் வழக்கமான சம்பளமாகப் பெறாமல், படத்தின் வசூலில் லாபப் பங்கீடு அடிப்படையில் ரன்வீர் சிங் ஒப்பந்தம் செய்திருந்தார்.

சுமார் ரூ. 325 கோடி வரை சம்பளம்

இப்படம் உலகளவில் ரூ. 3200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசாத்திய சாதனை படைத்ததால், இந்த லாபப் பங்கீட்டின் மூலம் ரன்வீர் சிங்கிற்கு மட்டுமே சுமார் ரூ. 325 கோடி வரை சம்பளமாக கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உச்ச நட்சத்திரங்களை முந்திய ரன்வீர்

ஒரே படத்திற்காக ரன்வீர் சிங் பெற்றுள்ள இந்த ரூ. 325 கோடி வருவாய், இந்தியத் திரையுலகின் தற்போதைய உச்ச நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் பெறும் சம்பளத்தை விடப் பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதியாவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்

இதன் மூலம் இந்தியாவிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் ரன்வீர் சிங் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இவருடைய மனைவி தீபிகா படுகோனும் இந்தியத் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in