

Rashmika Mandanna Vijay Deverakonda Invite PM Modi to Attends Reception : ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணம் நிறைவடைந்த நிலையில், பிரதமரை சந்தித்து வரவேற்பு அழைப்பிதழை வழங்கியுள்ளனர்.
கோலாகலமாக நடந்து முடிந்த "VIROSH" திருமணம்
நேஷ்னல் கிரஷ் என்று அழைக்கபடும் ராஷ்மிகாவிற்கும் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் உதய்ப்பூரில் நேற்று காலை சரியாக 10:10 மணியளவில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா இன்ஸ்டா பதிவு
திருமணத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா தம்பதி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்சிகரமான பதிவையும் , திருமண புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தனர்.
உருக்கமான பதிவு
அந்த பதிவில் விஜய் தேவரகொண்டா என் உயிர்த் தோழியை மணந்தேன் என்றும் ராஷ்மிகா , என்னுடைய கணவரை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.. மிஸ்டர் விஜய் தேவரகொண்டா என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளனர்.
இவர்களின் பதிவுகள், மற்றும் திருமண புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மார்ச் 4 -ல் வரவேற்பு நிகழ்ச்சி
ராஷ்மிகா மந்தனா- விஜய் தேவரகொண்டா தம்பதியினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.
வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள்
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முக்கியமான தென்னிந்திய திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
ரசிகர்கள் ஆவல்
திருமண நிகழ்வில் யார் யார் கலந்து கொண்டார்கள் என்று தெரியாத நிலையில், மார்ச் 4-ல் நடைபெற இருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் எந்தெந்த பிரபலங்கள் வருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
வரவேற்பு அழைப்பிதழ்
ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, மற்றொரு பக்கம் புதுமணத் தம்பதியான ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் வரவேற்பு நிகழ்விற்கான அழைப்பிதழை கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
பிரதமருக்கு முதல் அழைப்பிதழ்
வரவேற்பு நிகழ்வின் முதல் அழைப்பிதழை பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளதாக தெரிகிறது. ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு சென்று பிரதமரிடம் அழைப்பிதழைக் கொடுத்து வரவேற்று உள்ளனர்.
பிரதருடன் உரையாடல்
பின்னர் சிறிது நேரம் பிரதமரிடம் உரையாடிவிட்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. முன்னதாக பிரதமர் மோடி இவர்களின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
புதுமண தம்பதிகளாக
இந்த புகைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவும் , ராஷ்மிகா மந்தனாவும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் உடையணிந்து புதுமண தம்பதிகளாக காட்சியளிக்கின்றனர். தற்போது இந்த புகைப்படங்களும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.