திருமணத்தை உறுதிசெய்த ராஷ்மிகா : விஜய் தேவரகொண்டா எங்கே, எப்போது தெரியுமா!

Rashmika Mandanna Vijay Devarakonda Marriage Update : திருமணம் செய்துகொள்ள போவதை நடிகை ராஷ்மிகாவும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் அதிகாரப்பூர்வமாக உறுதி படுத்தியுள்ளனர்.
Rashmika Mandanna Vijay Devarakonda Marriage Update in Tamil
Rashmika Mandanna Vijay Devarakonda Marriage Update in Tamilsource: google
1 min read

Rashmika Mandanna Vijay Devarakonda Marriage Update in Tamil :

திருமணம் செய்துகொள்ள போவதை நடிகை ராஷ்மிகாவும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் அதிகாரப்பூர்வமாக உறுதி படுத்தியுள்ளனர்.

தென்னிந்திய திரை பிரபலங்கள் ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா ஜோடி.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் தான் இவர்களின் அறிமுக படம். 2018 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே இந்த ஜோடி வரவேற்பைப் பெற்றது.

ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா காதல்

திரையில் ஜோடியாக காதலர்களாக நடித்தவர்கள் நிஜத்திலும் காதலித்து வருவதாக அவ்வபோது செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.

இருவரும் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள், பொது இடங்களில் ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்வது என இருவரும் அனைவரின் கவனத்தை பெற்றிருந்தனர்.

இருவரும் காதலித்தாலும், தாங்கள் காதலிப்பதாக காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் எப்போதும் இவர்களின் திருமணப் பேச்சு ரசிகர்களிடையே உலவி வந்தது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி ரசிகர்கள்

எப்போதும் போல இதுவும் வதந்தியாக போய்விடுமா என்ற குழப்பத்தில் உள்ள ரசிகர்கள் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்நிலையில், ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் தங்களுடைய திருமணம் குறித்த அதிகாரப்புர்வ அறிவிப்பை இருவரும் பகிர்ந்து உள்ளனர். இதுகுறித்து The Wedding Of ViRosh..! எனும் பெயரில் அழைப்பிதழை வெளியிட்டுள்ளனர்.

அந்த அழைப்பிதழில்,

"எங்கள் அன்பானவர்களே, நீங்கள் எப்போதும் எங்கள் இருவருடனும் இருந்தீர்கள். மிகுந்த அன்புடன் 'ViRosh' என்ற பெயரை எங்களுக்கு அளித்தீர்கள்.

மேலும் படிக்க : ராஷ்மிகாவின் கைக்கு முத்தம்- திருமணத்தை உறுதி செய்த தேவரகொண்டா!

The Wedding of ViRosh

அதை அன்போடு ஏற்று, இதயம் நிறைய நாங்கள் இணையும் இந்த விழாவுக்கு The Wedding of ViRosh என்று பெயரிட விரும்புகிறோம் என்று பதிவிட்டுள்ளனர்.

எங்கள் இருவரையும் இவ்வளவு நாள் அன்புடன் தாங்கி வந்ததற்கு நன்றி. இனியும் நீங்கள் எங்களின் ஒரு பகுதியாக எப்போதும் இருப்பீர்கள் என்று நம்புகிறோம் என்றும் அழைப்பிதழில் இடம்பெற்றுள்ளது.

'ViRosh' என பெயரிடப்பட்டுள்ள இந்த அழைப்பிதழை இருவரும் தங்களது சமூக வலை தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் தங்களது திருமணம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவித்ததையடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் இருந்து விலகல்

பிப்ரவரி 26 -ல் உதய்ப்பூர் அரண்மையில் திருமணம், மார்ச் 4ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நடைபெற உள்ளதாகவும் , திருமணம் முடிந்து 2 மாதங்கள் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்கப்போவதாகவும் செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in