

"Release this on the day I die..." – Jackie Chan has already recorded his final song! Fans deeply moved.
ஜாக்கிசான் எனும் அசாத்திய கலைஞன்
உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் அசாத்திய ஆக்ஷன் நாயகன் ஜாக்கி சான், தனது இறப்புக்குப் பிறகு பாடப்பட வேண்டிய பிரியாவிடைப் பாடலை இப்போதே பதிவு செய்து வைத்துள்ளதாகக் கூறி ஒட்டுமொத்தத் திரையுலகையும் கலங்க வைத்துள்ளார்.
ஜாக்கிசான் பேச்சால் கலங்கிய ரசிகர்கள்
நம் அனைவருக்கும் பிடித்த குங்ஃபு சூப்பர் ஹீரோ ஜாக்கி சானுக்கு தற்போது 72 வயது. ஜாக்கிசான் சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் மிகவும் உருக்கமாகப் பேசிய பதிவு தான் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.
எனக்கு நெருக்கமான பலரை நான் இழந்துவிட்டேன்
அந்த விழாவில் ஜாக்கி சான் பேசும் போது "சமீபகாலமாக எனக்கு நெருக்கமான பலரை நான் இழந்துவிட்டேன். அதனால், நான் என்ன நினைக்கிறேனோ அதை உடனே சொல்ல வேண்டும், எதைச் செய்ய வேண்டுமோ அதை உடனே செய்துவிட வேண்டும் என்று தோன்றுகிறது.
எல்லாவற்றையும் கடந்து மகிழ்ச்சியாக இருக்கப் பழகிக்கொண்டேன்" என்று தனது மனமாற்றத்தை ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
அதிர்ச்சியளித்த இறுதிப் பாடல் முடிவு
அப்போதுதான், ரசிகர்களை உரைய வைக்கும் அதிர்ச்சித் தகவலையும் அவர் கூறியுள்ளார்.
தனது இறுதி வார்த்தைகளை ஒரு பாடலாக ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், "நான் இறக்கும் நாளில் இந்த பாடலை உலகிற்கு வெளியிடுங்கள்" என்று தனது குடும்பத்தினரிடமும், நிர்வாகத்திடமும் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் பலரும் கலங்கிப் போயினர்.
ரகசியமாக இருக்கும்
மேலும் அதில் சில வரிகளை சொல்லும் படி கேட்கவும், அவை என் இறுதிப்பயணத்தின் போது பாடப்படும் அதுவரை ரகசியமாக இருக்கும் என ஜாக்கிசான் மறுத்து விட்டார்.
குங்ஃபு தெரிந்த ஒரு நல்ல நடிகன்
மேலும் பேசிய அவர், "முன்பெல்லாம் 40 வயதில் ஒரு ஆபத்தான சண்டைக்காட்சியில் நடித்து, அதிலேயே இறந்து லெஜண்ட் ஆகிவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இப்போது அந்த எண்ணம் இல்லை.
வருடத்திற்கு ஒரு படம் - ஜாக்கிசான் உறுதி
நான் வெறும் ஆக்ஷன் ஸ்டார் மட்டுமல்ல, குங்ஃபு தெரிந்த ஒரு நல்ல நடிகன் என்று உலகிற்கு நிரூபிக்க விரும்புகிறேன்" என்றார். சண்டை போட முடிகிறதோ இல்லையோ, தம்மால் நடிக்க முடிகிற வரை வருடத்திற்கு ஒரு படம் நிச்சயம் தருவேன் என்றும் ரசிகர்களுக்கு அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
=====