

யார் இந்த பத்மா?
Superstar Rajinikanth Honours honest Sanitation Worker Padma : சென்னை திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பத்மா (50). இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணி செய்து வருபவர் .
குப்பையில் கிடந்த 45 சவரன்
தி.நகரில் உள்ள மகாராஜா சந்தானம் தெருவில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு குப்பையோடு கிடந்த கவர் ஒன்றை எடுத்து பார்த்தபோது, ஐஸ்கிரீம் டப்பாவுக்குள் 45 பவுன் தங்க நகைகள் இருப்பது தெரிந்தது.
காவல் நிலையத்தில் ஒப்படைத்த பத்மா
உடனடியாக அதனை தனது மேற்பார்வையாளர் மூலமாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் சோதனையில் அவை 45 பவுன் தங்க நகைகள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் நகைகள் அவை என்பது தெரியவந்தது.
நேர்மைக்கு குவிந்த பாராட்டு
பத்மாவின் இந்த நேர்மை செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டினர். அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் அழைத்து ரூ.1 லட்சம் வழங்கி பாராட்டினர் .
சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு
இவரின் இந்த நேர்மை செயலை போற்றும் வகையில் தமிழ்நாடு அஞ்சல் துறை இவரது முகம் பதித்த அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்பித்தது .
இதன் மூலம் இவர் ஒரு முன்மதிரியான நபராக சிறப்பிக்கப்பட்டுள்ளார் .
நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லத்திற்கு பத்மாவை நேரில் அழைத்து பாராட்டினார். அவரின் நேர்மைக்கு பரிசளிக்கும் விதமாக தங்க சங்கிலி அணிவித்து சிறப்பித்தார் . பத்மாவின் நேர்மையான செயலுக்கு கிடைத்த பெருமையாகவே இவையெல்லாம் கருதப்படுகிறது.
================