

Suriya Scene Movie FDFS Booking Status Updates
நீண்ட இடைவெளிக்குப் பின் நஸ்ரியாவின் ரீ-என்ட்ரி
பல ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகை நஸ்ரியா, 'சீன்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு கம்பேக் கொடுத்துள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகர்கள் சூர்யா, நஸ்லன் மற்றும் நஸ்ரியா, உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'சீன்' திரைப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளதால், தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் 'சீன்' திரைப்படம் வணிக ரீதியாகப் பெரும் வெற்றியைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி காட்சிக்கு அரசு அனுமதி - முதல்வர் விஜய் உத்தரவு
'சீன்' திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனை இணையதளங்களில் இன்னும் தொடங்கப்படாமல் இருந்ததற்கு, தமிழக அரசு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்துத் திட்டமிட்டு வந்ததே முக்கியக் காரணமாகும்.
இந்நிலையில், தமிழகத்திலுள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி 6 காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட அனுமதி அளித்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
காலை 6 மணிக்கு FDFS - ரசிகர்கள் உற்சாகம்
அரசின் இந்த அறிவிப்பின்படி, நடிகர் சூர்யாவின் 'சீன்' திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி (FDFS) காலை 6 மணிக்கே வெளியாகவுள்ளது உறுதியாகியுள்ளது. காலை 6 மணி காட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, 'சீன்' திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் இணையதளங்களில் ஆரம்பமாகியுள்ளன.
ஏற்கெனவே நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்திற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 'சீன்' படத்தின் டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
=======