

ஓடிடி வெளியீடு விவகாரம்
திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் திரைப்படங்களை 8 வார இடைவெளிக்கு பிறகுதான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு
பெரும்பாலான படங்கள் திரையரங்குகளில் தோல்வியடைந்து நஷ்டத்தை ஏற்படுத்தும் சூழலில், தயாரிப்பாளர்கள் தங்கள் முதலீட்டை மீட்க ஓடிடி தளங்களையே சார்ந்துள்ளனர்.
இதனால் இந்த ஒருதலைப்பட்சமான 8 வாரக் கட்டுப்பாட்டை ஏற்க முடியாது எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் மறுத்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் மற்றும் பிற தென்னிந்தியத் தயாரிப்பாளர் சங்கங்களும் இணைந்து ஒட்டுமொத்தமாக முடிவுகளைக் கண்டித்து வருகின்றன.
தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டம்
இந்தநிலையில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்படத் நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தயாரிப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்துள்ள முடிவு குறித்து பேசப்பட்டது.
செப் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் கிடையாது
இதையடுத்து, தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை 8-வார காலம் கழித்துதான் OTT-யில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால் தான், அந்தந்த திரைப்படங்களை திரையரங்குளில் திரையிட அனுமதிக்க முடியும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. .
தமிழ்நாட்டில் மட்டும் ஏன் புதிய நடைமுறை
தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மற்றும் கர்நாடகா மாநிலங்களில், நடைமுறையில் இல்லாதபோது, வேண்டுமென்றே தமிழ்நாட்டில் மட்டும் இந்த புதிய நடைமுறையை தன்னிச்சையாக புகுத்துவது கண்டிக்கத்தக்கது.
முடிவுகளை ஏற்க முடியாது
தயாரிப்பாளர்களை அழைத்து பேசி யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணம் முடிவுகளை அறிவிக்க வேண்டும்.
ஆனால், விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அப்படி தயாரிப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவினை தயாரிப்பாளர்களான எங்களால் ஏற்றுக் கொள்ள இயலாது என்பதை தெரிவிக்கிறோம்.
ஆண்டுக்கு 250 படங்கள் வெளியீடு
வருடத்திற்கு 250-திரைப்படங்கள் வெளியாகிறது. அதில் பெரும்பாலான திரைப்படங்களில் தயாரிப்பாளருக்கு முதலீடு செய்த தொகையில் பாதி அளவு கூட வராமல், ரூ.700 கோடிக்கு மேல் ஒவ்வொரு வருடமும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது.
படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் நிறுத்தம்
அவ்வாறு பெரும் இழப்பினை சந்தித்தும் தயாரிப்பாளர்கள் தொழில் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே, விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தன்னிச்சையான முடிவினை கண்டித்து...
தமிழ்த் திரையுலகில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துவது என்றும் தயாரிப்பாளர்கள் அனைவரின் சார்பிலும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து முடிவெடுத்துள்ளன.
============