
தமிழ் சினிமாவில் 80களின் இறுதியிலும் 90களிலும் டாப் ஹீரோவாக இருந்தவர் ராமராஜன்.
ரஜினி, கமல் படங்களுக்கே இவரது படங்கள் கடும் சவாலாக இருந்தன
கிராமத்து பின்னணி, காதல், மோதல், குடும்ப சென்டிமென்ட், அற்புதமான பாடல்கள் இவைதான் ராமராஜன் படங்களின் ஃபார்முலா.
அவற்றில் ஒன்றுதான் மக்களைக் கொண்டாட வைத்த, ‘கரகாட்டக்காரன்’.
மதுரை நடனா தியேட்டரில் ஒரு வருடத்துக்கும் மேல் ஓடிய இந்தப் படம் சில பகுதிகளில் 200 நாட்களுக்கு மேல் ஓடி, வசூலை அள்ளியது.
கரகாட்டக் கலைஞராக ராமராஜன். கரகாட்டக்காரியாக கனகா, தவில் கலைஞராக கவுண்டமணி, நாதஸ் கலைஞராக செந்தில், ஊர் பெரிய மனிதர் சின்னராசுவாக சந்தானபாரதி, கோவை சரளா என அனைவரின் உழைப்பும் இந்த படத்தை எங்கோ கொண்டு சென்றது.
கரகாட்டக்காரன் கதை, தில்லான மோகனாம்பாளின் இன்னொரு வடிவம் என்று, கங்கே அமரனே சொல்லி இருக்கிறார்.
கவுண்டமணி - செந்திலுக்கான காமெடி காட்சிகள் டாப்.
குறிப்பாக அந்த வாழைப்பழ காமெடிக்கு இன்றளவும் மவுசு உள்ளது. கரகாட்ட கோஷ்டியின் காரும் வெகுவாக பேசப்பட்டது.
படத்தின் மாபெரும் ஹிட்டுக்கு இன்னொரு காரணம், இளையாராஜாவின் மனதை மயக்கிய பாடல்கள்.
பட்டிதொட்டி எங்கும் பல ஆண்டுகள் இந்தப் பாடல்கள் ஒலித்து, ராமராஜனை கிராமத்து ஹீரோவாக வாழ வைத்தன.
வெறும 28 நாட்களில் முடிக்கப்பட்ட ’கரகாட்டக்காரன்’. 1989-ம் ஆண்டு இதே நாளில் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக முத்திரை பதித்தது.
‘கரகாட்ட கோபையா’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு தெலுங்கிலும் சக்கைப்போடு போட்டது
----