திருச்சியில் தமிழகத்தின் முதல் ‘டால்பி சினிமா’ ! : சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட்!

வழக்கமான திரையரங்குகளை விட பல மடங்கு மேம்பட்ட அனுபவத்தை டால்பி சினிமா வழங்குகிறது.
Tamil Nadu's First 'Dolby Cinema' in Trichy! A Fantastic Treat for Movie Fans!
Tamil Nadu's First 'Dolby Cinema' in Trichy! A Fantastic Treat for Movie Fans!source:google
1 min read

Tamil Nadu's First 'Dolby Cinema' in Trichy! A Fantastic Treat for Movie Fans!

திருச்சியில் டால்பி சினிமா

தமிழகத் திரையுலக வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, திருச்சியில் உள்ள எல்.ஏ. சினிமாஸ் (LA Cinemas) திரையரங்கில் இந்தியாவின் மிகச்சிறந்த தொழில்நுட்பமான ‘டால்பி சினிமா’ அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.

திருச்சிக்கு பெருமை

தமிழகத்தின் முதல் டால்பி சினிமா தியேட்டர் என்ற பெருமையை இதன் மூலம் திருச்சி பெற்றுள்ளது.

டால்பி சினிமாவின் சிறப்பம்சங்கள் என்ன?

வழக்கமான திரையரங்குகளை விட பல மடங்கு மேம்பட்ட அனுபவத்தை டால்பி சினிமா வழங்குகிறது.

டால்பி சினிமாவின் தொழில்நுட்ப விவரங்கள்

பிரம்மாண்டமான திரை

61 அடி அகலமும், 25.5 அடி உயரமும் கொண்ட பிரம்மாண்டமான ஸ்கோப் ஸ்க்ரீன் அமைக்கப்பட்டுள்ளது.

விஷன் ப்ரொஜெக்ஷன்

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள டூயல் E3LH டால்பி விஷன் ப்ரொஜெக்ஷன் தொழில்நுட்பம், காட்சிகளை மிகத் தத்ரூபமாகவும், அழுத்தமான கருப்பு நிறத்துடனும் திரையில் பிரதிபலிக்கும்.

ஆடியோ & 3D

சக்திவாய்ந்த டால்பி அட்மோஸ் ஒலி அமைப்பு மற்றும் அதிநவீன டால்பி 3D ஆதரவு இதில் உள்ளது.

இருக்கைகளின் எணிக்கை

ஒரே நேரத்தில் 456 பேர் அமர்ந்து ரசிக்கும் வகையில் சொகுசான இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி சினிமா ரசிகர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்!

சினிமா என்பது வெறும் காட்சி மட்டுமல்ல, அது ஒரு உணர்வு என்பதை உணர்த்தும் வகையில் இந்தத் திரையரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த படத்தரம்

உலகத் தரம் வாய்ந்த படத் தரம் மற்றும் காதுகளைத் துளைக்காத, ஆனால் அழுத்தமான ஒலி அனுபவத்தை இனி திருச்சி மக்கள் தங்கள் ஊர் திரையரங்கிலேயே அனுபவிக்கலாம்.

சினிமா பிரியர்கள் உற்சாகம்

டால்பி சினிமாச் திறப்பு விழாவை முன்னிட்டு சமூக வலைதளங்களில் சினிமா பிரியர்கள் தங்கள் உற்சாகத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை

"இனி பெரிய பட்ஜெட் படங்களைப் பார்க்க சென்னைக்கோ, வெளிநாடுகளுக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை; திருச்சியே போதும்!" என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in